இந்திய பங்கு சந்தையில் மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்கு சந்தைக் குறியீடான நிப்டி இரண்டும் நான்காவது நாளாகத் தொடர் சரிவைச் சந்தித்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலகச் சந்தையில் ஆசிய சந்தை மீதான உணர்வு மந்தமாக இருந்ததே முதலீட்டாளர்களுக்குப் பெறும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம் அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையிலான போர் மூலம் அபாயமும் சந்தை சரிவுக்கு முக்கியக் காரணங்கள் ஆகும்.
சென்செக்ஸ்
வியாழக்கிழமை (10/08/2017) ஆன இன்று இந்திய பங்கு சந்தைச் சந்த நேர முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 0.84 சதவீதம் அதாவது 266.51 புள்ளிகள் சரிந்து 31,531.33 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.
நிப்டி
அதே நேரம் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி 0.89 சதவீதம் அதாவது 87.80 புள்ளிகள் சரிந்து 9,820.25 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.
மும்பை பங்கு சந்தை (BSE)
மும்பை பங்கு சந்தைக் குறியீட்டினை பொருத்த வரையில் ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகள் 4.48 சதவீதமும், சுகாதாரத் துறை சார்ந்த பங்குகள் 2.89 சதவீதமும், ஆட்டோமொபைல் துறை பங்குகள் 2.8 சதவீதமும், பொதுத் துறை நிறுவனப் பங்குகள் 2.54 சதவீதமும் சரிவை சந்தித்துள்ளன.
நட்டம் அளித்த பங்குகள்
டாடா மோட்டார்ஸ் (-8.29%), டாக்டர் ரெட்டி (-4.97%), சன் பார்மா (-2.53%), பவர் கிரிட் (-2.16%) மற்றும் சிப்லா (-2.00%)
டாப் 5 லாபம் அளித்த பங்குகள்
இன்ஃபோசிஸ் (+ 1.61%), எல் அண்ட் டி (+ 0.68%), விப்ரோ (+ 0.61%), டிசிஎஸ் (+ 0.43%) மற்றும் ஐடிசி (+ 0.33%)
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications