கர்நாடகாவில் ஜேடிஎஎஸ் கூட்டணியுடன் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ள நிலையில் பிஜேபியின் 2019ஆம் பொதுத் தேர்தலில் வெற்றி வாய்ப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளது எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக இந்திய சந்தையில் இன்று முதலீட்டாளர்கள் சந்தையில் இருந்து வெளியேற வருகின்றனர்.
பிஜேபி எபெக்ட்
செவ்வாய்க்கிழமை காலை வர்த்தகத்தில் ஆரம்பக்கட்ட வாக்கு எண்ணிக்கையில் பிஜேபி முன்னிலை வகித்த நிலையில் உள்நாட்டு மற்றும் அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டின் மூலம் சென்செக்ஸ் காலை வர்த்தகத்திலேயே சுமார் 400 புள்ளிகள் வரையில் உயர்ந்து. இன்று இதன் நிலை தலைகீழாக மாறியுள்ளது என்றால் மிகையாகாது.
புதன்கிழமை காலை வர்த்தகம் துவக்கம் முதலே சென்செக்ஸ் குறியீடு 250 புள்ளிகள் வரையில் சரிந்தது.
வட கொரியா, தென் கொரியா
இதுமட்டும் அல்லாமல் மீண்டும் வட கொரியா, தென் கொரியா இடையிலான பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில் ஆசிய சந்தையில் இன்று மந்தமான வர்த்தகச் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஆசிய சந்தை
ஆசிய சந்தையில் 11 மணி நிலவரத்தின் படி சீனா 0.20 சதவீதமும், ஹாங்கார் 0.18 சதவீதமும், இந்தியா சந்தை 0.68 சதவீதமும், ஜப்பான் 0.35 சதவீதமும், தைவான் 0.01 சதவீதம் வரையில் சரிவடைந்துள்ளது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 11 மணியளவில் 205 புள்ளிகள் சரிவில் 35,338.01 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 74.65 புள்ளிகள் சரிந்து 10,727.20 புள்ளிகளையும் அடைந்துள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications