தொடர்ச்சியாக கடந்த சில தினங்களாகவே சரிந்து வரும் சந்தையானது முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பினை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இன்று காலை தொடக்கத்திலேயே கேப் டவுனாக தொடங்கியது. மேலும் முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தினை ஏற்படுத்தியது.
எனினும் இது குறைந்த விலையில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. இன்று காலை தொடக்கத்தில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேலாகவும், நிஃப்டி 16850 லெவலையும் தொட்டது.
சரிவு ஏன்?
தொடர்ச்சியாக ஆறாவது அமர்வாக சந்தையானது சரிவினைக் காண்டது. எனினும் குறைந்த விலையானது முதலீட்டாளர்காளை வாங்க தூண்டியது. தொடர்ச்சியாக சர்வதேச அளவில் அதிகரித்து வரும் ஒமிக்ரானுக்கு மத்தியில், அமெரிக்கா ரஷ்யா இடையேயான பதற்றம், மானிட்டரி பாலிசி, உள்ளிட்ட பல காரணிகளும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியது.
புராபிட் புக்கிங்
எனினும் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் வரையில் இந்த ஏற்ற இறக்கம் தொடரலாம். ஃபெடரல் வங்கி நடப்பு ஆண்டில் 4 வட்டி அதிகரிப்புகள் இருந்தால், சந்தையானது மீண்டும் சரிவினைக் காணலாம். 2022ம் ஆண்டின் பிற்பாதியில் பணவீக்கம் குறையலாம். புராபிட் புக்கிங் காரணமாக வெளியேறிய முதலீடுகள் மீண்டும் வரலாம்.
எழுச்சி இருக்கலாம்
அதோடு ஷார்ட் கவரிங் காரணமாக மீண்டும் ஒரு எழுச்சி விரைவில் இருக்கலாம். இதனை நிரூபிக்கும் விதமாக இன்று காலை தொடக்கத்தில் சரிவில் தொடங்கிய சந்தையானது, 366.64 புள்ளிகள் அதிகரித்து, 57,858.15 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது. இதே நிஃப்டி 128.85 புள்ளிகள் அதிகரித்து, 17,277.95 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
ஆக்ஸிஸ் வங்கி
சென்செக்ஸ் குறியீட்டில் இன்று ஆக்ஸிஸ் வங்கி 4.68% அதிகரித்து, 736.80 ரூபாயாக வர்த்தகமாகியுள்ளது. இது இவ்வங்கியானது அதன் நிகரலாபம் மூன்று மடங்கு அதிகரித்த நிலையில், 3973 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது எதிர்பார்ப்புகளையும் விட அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?



Click it and Unblock the Notifications