553 புள்ளிகள் அவுட், காரணம் வட்டிவிகிதம்..! என்னய்யா வட்டி விகிதம் குறைஞ்சது ஒரு தப்பா..?

மும்பை: இன்று காலை சென்செக்ஸ் 40,136 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 39,529 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. நேற்று மாலை சென்செக்ஸ் 40,083-க்கு நிறைவடைந்தது. ஆனால் இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்திலேயே சுமார் 53 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் புள்ளி 553 புள்ளிகள் குறைந்திருக்கின்றன.

அதே போல் நிஃப்டி50 இண்டெக்ஸ் காலை 12,039 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 11,843 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. நேற்று மாலை வர்த்தக நேர முடிவில் நிஃப்டி50 12,021 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங்கை விட இன்றைய குளோசிங் 177 புள்ளிகள் குறைந்திருக்கின்றன.

553 புள்ளிகள் அவுட், காரணம் வட்டிவிகிதம்..! என்னய்யா வட்டி விகிதம் குறைஞ்சது ஒரு தப்பா..?

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 22 பங்குகள் இறக்கத்திலும், 08 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமாகும் 50 பங்குகளில் 36 பங்குகள் இறக்கத்திலும், 14 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,731 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 755 பங்குகள் ஏற்றத்திலும், 1,840 பங்குகள் இறக்கத்திலும், 136 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,731 பங்குகளில் 48 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 149 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

நிஃப்டி இண்டெக்ஸ்களில் அனைத்து துறை சார்ந்த பங்குகளும் இறக்கத்தில் வர்த்தகமாயின. இன்றைய வர்த்தகத்தில் எஸ்பிஐ, ரிலையன்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், இண்டஸ் இந்த் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.

கோல் இந்தியா, டைடன் கம்பெனி, ஹிரோ மோடோகார்ப், பவர் க்ரிட் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் யுனிலிவர் போன்ற நிறுவனப் பங்குகள் சுமார் 1.20 சதவிகித விலை ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. கெயில், இந்தியாபுல்ஸ் ஹவுசிங், இண்டஸிந்த் பேங்க், யெஸ் பேங்க், எஸ்பிஐ போன்ற பங்குகள் சுமார் 4.5 சதவிகித இறக்கத்தில் வர்த்தகமாயின.

ஜூன் 05, 2019-ல் அமெரிக்க சந்தையான நாஸ்டாக் 0.64% வர்த்தகமானது. அதோடு இன்று ஜூன் 06, 2019 ஐரோப்பிய சந்தைகளில் லண்டனின் எஃப்.டி.எஃப்.இ 0.69%, பிரான்சின் சி ஏ சி 0.74% , ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 0.69% வர்த்தகமாகி வருகின்றன.

ஜூன் 06, 2019-ல் ஆசிய பங்குச் சந்தைகளில் பெரும்பாலான சந்தைகள் இன்று ஏற்றத்தில் வர்த்தகமாயின. அதிகபட்சமாக இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் 1.72% ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஜப்பானின் நிக்கி, தைவானின் தைவான் வெயிடெட், சீனாவின் ஹாங்காய் காம்போசைட் போன்ற சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாயின.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 69.27 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. அதே போல ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெயின் விலை 61.39 டாலராக வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+