9,390 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்! செம அடி வாங்கிய 2019 - 20!

இந்த 2019 - 20 நிதி ஆண்டில் சென்செக்ஸ் 9,390 புள்ளிகள் சரிந்து இருக்கிறது. கடந்த ஏப்ரல் 01, 2019 அன்று சென்செக்ஸ் 38,858 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது.

இன்று மாலை சென்செக்ஸ் 29,468 புள்ளிகளில் சென்செக்ஸ் வர்த்தகம் நிறைவடைந்தது. ஆக இந்த 2019 - 20 நிதி ஆண்டில் மட்டும் சென்செக்ஸ் 9,390 புள்ளிகள் சரிந்து இருக்கிறது.

வருடா வருடம் கொஞ்சமாவது ஏற்றம் காணும் சென்செக்ஸ் இந்த முறை செம அடி வாங்கி இருக்கிறது.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

நேற்று மாலை, 28,440 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்த சென்செக்ஸ், இன்று காலை 29,294 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. அதிகபட்சமாக 29,770 புள்ளிகளைத் தொட்டதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 29,468 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. ஆக நேற்றைய குளோசிங்கில் இருந்து இன்றைய குளோசிங் புள்ளியான 29,468 புள்ளிகளை கணக்கிட்டால் 1,028 புள்ளிகள் ஏற்றத்தில் இந்த நிதி ஆண்டு நிறைவடைந்து இருக்கிறது.

நிஃப்டி நிலை என்ன

நிஃப்டி நிலை என்ன

நேற்று மாலை நிஃப்டி 8,281 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை நிஃப்டி 8,529 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி இன்று 8,597 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்தது. ஆக நிஃப்டி 316 புள்ளிகள் ஏற்றத்தில் இந்த 2019 - 20 நிதி ஆண்டை நிறைவு செய்து இருக்கிறது.

பங்குகள் நிலை

பங்குகள் நிலை

சென்செக்ஸின் 30 பங்குகளில் 26 பங்குகள் ஏற்றத்திலும், 04 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி எஸ் இ-யில் 2,452 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,522 பங்குகள் ஏற்றத்திலும், 773 பங்குகள் இறக்கத்திலும், 157 பங்குகள் விலை மாற்றம் இன்றியும் வர்த்தகமாயின.

உலக சந்தை

உலக சந்தை

இன்று மார்ச் 31, 2020-ல் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கும் லண்டனின் எஃப் டி எஸ் இ 0.73 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதே போல ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 0.41 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் பிரான்சின் சி ஏ சி மட்டும் 0.15 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

ஆசிய சந்தைகள்

ஆசிய சந்தைகள்

இன்று மார்ச் 31, 2020, ஆசியாவின் பெரும்பாலான சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. அதிகபட்சமாக தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட் 3.50 % ஏற்றத்தில் வர்த்தகமானது. குறைந்தபட்சமாக ஜப்பானின் நிக்கி 0.88 % சரிந்து வர்த்தகமானதும் குறிப்பிடத்தக்கது. ஆக ஓரளவுக்கு உலக சந்தைகள் எல்லாமே ஏற்றத்தில் வர்த்தகமாயின.

டாலர் & கச்சா எண்ணெய்

டாலர் & கச்சா எண்ணெய்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஒரு வழியாக 76 ரூபாய்க்குக் கீழ் வந்து இருக்கிறது என்றாலும், இந்திய ரூபாய் மதிப்பு 75 ரூபாய்க்கு மேலேயே இருக்கிறது. தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 75.62 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை சுமாராக 27.70 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

பங்குகள்

பங்குகள்

பஜாஜ் ஃபனான்ஸ், ரிலையன்ஸ், ஹெச் டி எஃப் சி, ஹெச் டி எஃப் சி பேங்க், ஐ சி ஐ சி ஐ பேங்க் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. பாரத் பெட்ரோலியம், பிரிட்டானியா, ரிலையஸ், கெயில், ஐ டி சி போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+