மும்பை: தொடர்ந்து சரிவை கண்டு வரும் இந்திய பங்கு சந்தைகள் கடந்த வெள்ளிக்கிழமையன்று காலையில் ஏற்றம் கண்ட நிலையில், சென்செக்ஸ் 131 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 29,815 ஆக முடிவடைந்திருந்தது. இதே தேசிய பங்கு சந்தை 18 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 8,660 ஆகவும் முடிவடைந்திருந்தது.
இந்த நிலையில் இன்று காலையில் சர்வதேச சந்தைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. இதன் எதிரொலியாக இந்திய பங்கு சந்தையும் தொடக்கத்திலேயே 1,100 புள்ளிகளூக்கு மேல் வீழ்ச்சி கண்டு வர்த்தகமாகியது. இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொருளாதாரம் மேலும் வீழ்ச்சி காணலாம் என்ற உணர்வினால் சந்தை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.

இந்த நிலையில் சென்செக்ஸ் இன்டெக்ஸில் ஐடிசி மற்றும் டிசிஎஸ் உள்ளிட்ட 28 பங்குகள் தவிர, மற்ற அனைத்து பங்குகளும் சிவப்பு நிறத்தில் தான் வர்த்தகமாகி வருகிறது. இதில் ஹெச்டிஎஃப்.சி மற்றும் ஓஎன்ஜிசி, இந்தஸிந்த் பேங்க், எம் & எம் பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் 4 -8% குறைந்துள்ளது.
இதே நிஃப்டி குறியீட்டில் சிப்லா, டிசிஎஸ் ஐடிசி உள்ளிட்ட பங்குகள் மட்டுமே பச்சை நிறத்தில் உள்ளன. இதே யுபிஎல், ஸ்ரீ சிமெண்ட், பஜாஜ் பைனான்ஸ், ஈச்சர் மோட்டார், ஜே எஸ் டபள்யூ ஸ்டீல், எம் &எம் உள்ளிட்ட பல பங்குகள் வீழ்ச்சி கண்டும் வருகின்றன.
மேலும் அனைத்து துறை குறியீடுகளும் தொடர்ந்து சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி ரியால்டி மற்றும் ஆட்டோதுறை பங்குகள் 4% வீழ்ச்சியுடனும், வங்கித் துறை குறியீடுகள் 3.5% வீழ்ச்சியுடனும், பைனான்ஷியல் மற்றும் மெட்டல்ஸ் உள்ளிட்ட துறையும் 3.5% வீழ்ச்சி கண்டுள்ளது.
இதே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 75.21 ஆகவும் வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது சென்செக்ஸ் 512 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 29,303 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 143 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 8517 ஆகவும் வர்த்தகமாகியும் வருகிறது.


Click it and Unblock the Notifications