தொடர்ந்து மந்தமான வர்த்தகத்தை சந்திக்கும் மும்பை பங்குச்சந்தை..!
மும்பை: அமெரிக்க மற்றும் ஆசிய சந்தையின் நிலையான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை இன்று காலை 80 புள்ளிகள் வரை உயர்ந்தது, ஆனால் கார்ப்ரேட் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் மற்றும் மத்திய அரசு அறிவிக்க மத்திய பட்ஜெட் அறிக்கை ஆகியவற்றின் எதிரொலியாகப் பங்குச்சந்தை வர்த்தகம் மந்தமான நிலையில் மட்டுமே இருந்தது.
இதனிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 1 மாத சரிவை சந்தித்த நிலையில் சிறு முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டை வெளியேறினர்.

இத்தகைய சூழ்நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு புதன்கிழமை வர்த்தகத்தில் 10.11 புள்ளிகள் உயர்ந்து 26,633.13 புள்ளிகளை எட்டியுள்ளது.
மேலும் நிஃப்டி குறியீடு 1.75 புள்ளிகள் உயர்ந்து 8,191.50 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications