இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம், அமெரிக்கா-சீனா இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் போன்ற காரணங்களால் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் களை கட்டியது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி சுமார் 4 சதவீதம் உயர்ந்தது. வரும் நாட்களிலும் பங்குச் சந்தைகளிலும் இந்த ஏற்றம் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.
நிஃப்டி
ஆனால் இன்று காலையில் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. வர்த்தகத்தின் இடையே மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1200 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 24,800 புள்ளிகளுக்கு கீழ் சென்றது. பங்குச் சந்தையின் திடீர் சரிவால் முதலீட்டாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

முதலீட்டாளர்கள் லாப நோக்கத்துடன் செயல்பட்டது, பலவீனமான இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் சில முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் எதிர்பார்ப்புகளுக்கு இணையாக இல்லாதது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் பலத்த அடி வாங்கியது. டிசிஎஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ் மற்றும் இன்போசிஸ் ஆகிய பங்குகள் 2 முதல் 3 சதவீதத்துக்கு மேல் சரிவு கண்டது.
அதானி போர்ட்ஸ்
மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், அதானி போர்ட்ஸ், டெக் மகிந்திரா, பஜாஜ் பைனான்ஸ் மற்றும் சன்பார்மா ஆகிய 4 நிறுவன பங்குகளை தவிர்த்து மற்ற 26 நிறுவன பங்குகளின் விலை வீழ்ச்சி கண்டது. பங்குச் சந்தையில் ஐடி மற்றும் வங்கி துறைகளை சேர்ந்த பங்குகள் பலத்த அடி வாங்கின.
மதியம் 1 மணி நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,246.44 புள்ளிகள் குறைந்து 81,183.46 புள்ளிகளில் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 311.25 புள்ளிகள் சரிந்து 24,613.45 புள்ளிகளில் இருந்தது.
கராச்சி பங்குச் சந்தை
அதேசமயம், பாகிஸ்தானில் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டுள்ளது. இந்த வாரத்தில் தொடர்ந்து 2 வது வர்த்தக தினமான இன்று கராச்சி பங்குச் சந்தையின் குறியீட்டு எண் KSE 100 2 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது. தற்போது கராச்சி பங்குச் சந்தை இன்டெக்ஸ் அதன் இதுவரை இல்லாத புதிய உச்சத்துக்கு அருகில் உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்து நேற்று கராச்சி பங்குச் சந்தை 9.4 சதவீதம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரே வருஷத்தில் 276% லாபம் கொடுத்த சிகரெட் கம்பெனி.. காட்ஃப்ரே பிலிப்ஸ் பங்கு உங்ககிட்ட இருக்கா..?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications