இந்திய பங்குச் சந்தைகளில் நேற்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் களை கட்டியது. 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி சுமார் 4 சதவீதம் உயர்ந்தது. இதனால் முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்தனர். இந்த உற்சாகம் ஒரு நாள் கூட நீடிக்கவில்லை.
இன்று காலையில் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. வர்த்தகத்தின் இடையே மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1300 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 24,600 புள்ளிகளுக்கு கீழ் சென்றது. முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. முதலீட்டாளர்கள் லாப நோக்கில் செயல்பட்டது உள்ளிட்ட 5 காரணங்கள் பங்குச் சந்தைகளின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன.

லாப நோக்கம்
போர் நிறுத்த செய்தியின் எதிரொலியாக நேற்று இந்திய பங்குச் சந்தைகள் சுமார் 4 சதவீதம் உயர்ந்தன. அன்றைய தினம் பெரும்பான்மையான பங்குகளின் விலை ஏற்றம் கண்டது. இதனையடுத்து முதலீட்டாளர்கள் இன்று லாப நோக்கில் பங்குகளை விற்பனை செய்தனர். இது சந்தை பின்னடைவுக்கு வழி வகுத்தது. குறுகிய காலத்தில் பங்குகளின் விலை விரைவாக உயர்ந்தது வர்த்தகர்களையும் எச்சரிக்கையாக இருக்க செய்தது. இது முன்னணி நிறுவன பங்குகளின் விற்பனைக்கு வழி வகுத்தது.
அமெரிக்கா-சீனா
அமெரிக்காவும், சீனாவும் வரிகளை குறைத்து பொருளாதார ரீதியாக ஒத்துழைக்க ஒப்புக்கொண்டது, உலகளாவிய முதலீட்டாளர்களின் மனநிலையை நேர்மறையாக மாற்றியது. முன்பு, அமெரிக்கா-சீனா இடையிலான பதற்றத்தின்போது, சர்வதேச உற்பத்தியாளர்கள் தங்களது விநியோக சங்கிலிகளை பன்முகப்படுத்தவும், இந்தியாவை சீனாவுக்கு மாற்றாக கருதுவார்கள் என்றும் சில ஆய்வாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது பதற்றங்கள் தணிந்ததால், அந்த எதிர்பார்ப்பு பலவீனமடைந்துள்ளது.
கச்சா எண்ணெய்
அமெரிக்காவும் சீனாவும் சமாதானத்துக்கு வந்ததையடுத்து, உலகளாவிய வர்த்தக உணர்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் தேவை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பால் நேற்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் 67.74 டாலராகவும், டபுள்யூடிஐ கச்சா எண்ணெய் பேரல் 61.77 டாலராகவும் உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வது இந்தியா போன்ற எண்ணெய் அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு பாதகமான அம்சமாகும். இருப்பினும் இன்று சர்வதேச சந்தையில் வர்த்தகத்தின் இடையே கச்சா எண்ணெய் விலை 0.3 சதவீதம் குறைந்தது.
அமெரிக்க கருவூல பத்திர வருவாய்
அமெரிக்க 10 ஆண்டு கருவூல பத்திர வருவாய் 4.45ஆக உயர்ந்துள்ளது. இது மார்ச் மாத இறுதியில் 4.25 சதவீதமாக இருந்தது. அமெரிக்க கருவூல பத்திர வருவாய் அதிகரிப்பு அமெரிக்க சொத்துக்களை உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமானதாக மாற்றுகிறது. இதனால் சர்வதேச முதலீட்டாளர்கள் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் சந்தைகளிலிருந்து முதலீட்டை திரும்ப பெற்று அங்கு முதலீடு செய்ய தூண்டுகிறது. இது இந்திய பங்குச் சந்தைகளுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரிய நிறுவனங்கள்
சென்செக்ஸில் அதிக பங்களிப்பை கொண்ட எச்டிஎஃப்சி வங்கி, இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, கோடக் மகிந்திரா வங்கி மற்றும் டிசிஎஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை இணைந்து சென்செக்ஸில் 502 புள்ளிகள் சரிவுக்கு பங்களித்தன. திங்கட்கிழமையன்று டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் பங்குகளின் விலை நன்கு உயர்ந்தது. ஆனால் இன்று லாப நோக்கத்தில் முதலீட்டாளர்கள் செயல்பட்டதால் அந்த இரண்டு பங்குகளும் சரிவை சந்தித்தன.
இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,281.68 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 81,148.22 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 346.35 புள்ளிகள் சரிந்து 24,578.35 புள்ளிகளில் நிலை கொண்டது.
அவசர அவசரமாக கணக்கை முடித்த முதலீட்டாளர்கள் ... கலக்கத்தில் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள்
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

எரியும் நெருப்பில் எண்ணெய்! நயாராவின் 35 நாள் முடக்கம்.. இந்தியாவின் நிலை என்னவாகும்?

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

1970-களை விட மோசமான எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும்! உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து?IEA எச்சரிக்கை?

சரியான நேரத்தில் கைகொடுத்த ரஷ்யா! மங்களூரு துறைமுகத்தில் நங்கூரமிட்ட எண்ணெய் கப்பல்! பெரும் நிம்மதி..!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!



Click it and Unblock the Notifications