சாமானிய மக்கள் தற்போது பாரம்பரியமான முதலீடுகளான ரியல் எஸ்டேட், தங்கம் மற்றும் பிக்சட் டெபாசிட் போன்றவற்றில் முதலீடு செய்வதை காட்டிலும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக இன்றைய தலைமுறையினர் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. அதேசமயம், பங்குச் சந்தையில் ஒருவர் நேரடியாக முதலீடு செய்வதை காட்டிலும் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் வாயிலாக முதலீடு செய்வது சிறந்ததாக கருதப்படுகிறது.
எஸ்ஐபி
எஸ்ஐபி வழிமுறையில் பலரும் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். எஸ்ஐபி என்பது குறிப்பிட்ட கால இடைவெளியில் (உதாரணமாக மாதந்தோறும்) குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் பண்டு திட்டத்தில் முதலீடு செய்வதாகும். ஒரு சிறிய தொகையை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் முதலீடு செய்வது எளிது என்பதால் எஸ்ஐபி வழிமுறையில் பலரும் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் எஸ்ஐபி பங்களிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்திய மியூச்சுவல் ஃபண்டுகள் சங்கம் (ஏஎம்எஃப்ஐ) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025 ஏப்ரல் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் எஸ்ஐபி பங்களிப்பு ரூ.26,632 கோடியை எட்டியது. இது ஒரு மாதத்தில் இதுவரை இல்லாத அதிகபட்சமாகும்.
மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் எஸ்ஐபி பங்களிப்பு அதிகரித்து இருப்பது மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. அதேசமயம், கடந்த ஏப்ரல் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்டு எஸ்ஐபி (SIP) நிறுத்த விகிதம் கடுமையாக உயர்ந்திருப்பது மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்ஐபி நிறுத்த விகிதம்
மியூச்சுவல் ஃபண்டு எஸ்ஐபி நிறுத்த விகிதம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் புதிதாக பதிவு செய்யப்பட்ட எஸ்ஐபி கணக்குகளின் எண்ணிக்கையுடன் நிறுத்தப்பட்ட அல்லது முதிர்ச்சியடைந்த எஸ்ஐபி கணக்கு எண்ணிக்கையை ஒப்பிட்டு கிடைக்கும் விகிதமாகும். இந்த விகிதம் 100 சதவீதத்தை தாண்டினால், புதிதாக தொடங்கப்பட்டதை விட, அதிகளவில் மியூச்சுவல் ஃபண்டு எஸ்ஐபி கணக்குகள் நிறுத்தப்பட்டுள்ளன என்பதை குறிக்கும்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்டு எஸ்ஐபி நிறுத்த விகிதம் 297.74 சதவீதமாக அதிகரித்துள்ளது. முந்தைய மார்ச் மாதத்தில் இது 128.27 சதவீதம் என்ற அளவில்தான் இருந்தது. எஸ்ஐபி நிறுத்த விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவது மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2024 ஏப்ரல் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்டு எஸ்ஐபி (SIP) நிறுத்த விகிதம் 52.24 சதவீதம் என்ற அளவில்தான் இருந்தது.
புதிய எஸ்ஐபி
கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.36 கோடி எஸ்பிஐ கணக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது அல்லது முதிர்வு அடைந்துள்ளது. அதேசமயம் அந்த மாதத்தில் புதிதாக 46.01 லட்சம் எஸ்ஐபிக்கள் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. நடப்பு 2025-26ம் நிதியாண்டில் செயல்பாட்டில் உள்ள எஸ்ஐபி கணக்குகளின் எண்ணிக்கை 9.14 கோடியாக உள்ளது. கடந்த 2024-25ம் நிதியாண்டில் மியூச்சுவல் ஃபண்டு எஸ்ஐபி நிறுத்த விகிதம் 75.63 சதவீதமாக இருந்தது. அந்த நிதியாண்டில் 5.14 கோடி எஸ்ஐபி கணக்குகள் ரத்து செய்யப்பட்டன மற்றும் புதிதாக 6.79 கோடி எஸ்பிஐ கணக்குகள் பதிவானது.
மீண்டும் ஜோடி சேர்ந்த அமெரிக்கா-சீனா.. பங்குச் சந்தையை கலக்கிய மெட்டல் பங்குகள்
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications