வட்டி விகிதங்களை மாற்றியமைப்பதற்காக ரிசர்வ் வங்கி ஜூன் 4-6 வரை 3 நாள் நாணய கொள்கை கூட்டத்தைத் துவங்கியுள்ளது, இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் காலை முதல் மந்தமாக இருந்த நிலையில் மதிய வர்த்தகத்தில் அதிகளவிலான பங்குகள் விற்பனை ஆகத் துவங்கியது.
இதனால் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 225 புள்ளிகள் வரையில் சரிந்தது. மந்தமான வர்த்தகத்தில் இருந்த சென்செக்ஸ் ஐரோப்பிய சந்தை துவக்கத்தில் மளமளவெனச் சரிய துவங்கியது.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 215.37 புள்ளிகள் சரிந்து 35,011.89 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 67.70 புள்ளிகள் சரிந்து 10,628.50 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
தொடர்ந்து 2 வது வர்த்தக நாளாகத் திங்கட்கிழமை வர்த்தகம் சரிந்த நிலையில், இன்றைய வர்த்தகத்தில் டாப் 30 நிறுவனங்கள் பட்டியிலில் டாக்டர் ரெட்டி, இன்போசிஸ், மஹிந்திரா, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.
இதேபோல் எச்டிஎப்சி, பார்தி ஏர்டெல், பவர் கிரின்ட், அதானி போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் 2 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை பதிவு செய்து


Click it and Unblock the Notifications