மும்பை, இந்தியா: இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்திலேயே sensex சுமார் 360 புள்ளிகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. நேற்றைய குளோசிங் புள்ளியான 37,018 புள்ளிகளில் இருந்து 98 புள்ளிகள் சரிந்து கேப் டவுனில் தான் இன்று காலை sensex வர்த்தகமாகத் தொடங்கியது.
sensex-ஐப் போல நிஃப்டியிலும் இதே கதை தான். இன்று காலையிலேயே சுமார் 100 புள்ளிகள் இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நிஃப்டி 50 இண்டெக்ஸ் தன் நேற்றைய குளோசிங் புள்ளியான 10,980 புள்ளிகளில் இருந்து சுமார் 50 புள்ளிகள் சரிந்து, கேப் டவுனில் தான் வர்த்தகமாகத் தொடங்கியது. நிஃப்டி 50 இண்டெக்ஸ் கடந்த மார்ச் 06, 2019-க்குப் பிறகு 10,875 என்கிற புள்ளியைத் தொடவில்லை. ஆனால் இப்போது தொட்டு வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது என்பது கவலைக்குறியதாகப் பார்க்கிறார்கள் சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள்.

இதற்கு முக்கிய காரணமாக சீனாவின் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்திருக்கும் புதிய 10 சதவிகித வரிப் பிரச்னையை காரணமாகச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள். இன்று பெரும்பாலான ஆசியச் சந்தைகள் இறக்கத்தில் தான் வர்த்தகமாகி வருகின்றன. ஹாங்காங்கின் ஹேங்செங் சந்தை அதிகபட்சமாக 2.40 சதவிகித இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
இந்திய சந்தையில் ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற, அதிக வெயிட்டேஜ் கொண்ட பெரிய நிறுவனப் பங்குகளே இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. நேற்று வெளியான பார்தி ஏர்டெல்லின் மோசமான காலாண்டு முடிவுகளால் இப்போது அந்த நிறுவன பங்குகளின் விலை சரிய வேண்டும். ஆனால் முரணாக தற்போது சுமார் 3.3 சதவிகித விலை ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகளின் விலை நேற்றைய வர்த்தக நேரத்திலும் சுமார் 4 சதவிகித ஏற்றம் கண்டது கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.
பார்தி ஏர்டெல் தவிர ஏஷியன் பெயிண்ட்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஜி எண்டர்டெயின்மெண்ட், அல்ட்ரா டெக் சிமெண்ட் போன்ற பங்குகளும் இன்றைய வர்த்தக நேரத்தில் விலை ஏற்றம் கண்டு வருகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் 25 பைசா சரிந்து தற்போது 69.30 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications