அமெரிக்கப் பெடரல் வங்கி பணவீக்கத்தைக் குறைக்க வட்டி விகிதத்தை உயர்த்தினாலும் இது போதுமானதாக இல்லை என அமெரிக்க முதலீட்டாளர்கள் கணித்துள்ள நிலையிலும், அமெரிக்காவுக்கு நிகராகப் பிரிட்டன், இந்தியா போன்ற பிற உலக நாடுகளும் வட்டியை உயர்த்தி வரும் காரணத்தால் வியாழக்கிழமை அமெரிக்கப் பங்குச்சந்தை மிகவும் மோசமான சரிவை எதிர்கொண்டது.
இதன் எதிரொலியாக இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சி கொடுத்தது.
வெள்ளிக்கிழமை
வாரத்தின் கடைசி நாளான இன்று மும்பை பங்குச்சந்தையின் ப்ரீ ஓப்பனிங் வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 1000 புள்ளிகள் வரையில் சரிந்து. இதனால் ரீடைல் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் வர்த்தகம் துவங்கிய பின்பும் 1000 புள்ளிகள் சரிவு 660 புள்ளிகள் சரிவாகக் குறைந்தது.
அமெரிக்கப் பங்குச்சந்தை சரிவு
இன்றைய வர்த்தகச் சரிவுக்கு முக்கியக் காரணம் அமெரிக்கப் பங்குச்சந்தையில் வியாழக்கிழமை ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு தான். சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் அனைத்து நிறுவனங்களும் சரிவில் உள்ளது.
நிஃப்டி
இதேபோல் நிஃப்டி குறியீடு 219.95 புள்ளிகள் சரிவில் 16,462.70 புள்ளிகளை எட்டியுள்ளது. இன்றைய காலை வர்த்தகத்தில் நிதியியல் சேலை துறை பிரிவில் இருக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை எட்டியுள்ளது. குறிப்பாக நிஃப்டி ஐடி குறியீடு 2.18 சதவீதம் சரிந்துள்ளது.
அமெரிக்கச் சந்தை
பெடரல் ரிசர்வ் பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு வட்டி விகிதத்தை உயர்த்தித் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்தது. இதன் எதிரொலியாக வால் ஸ்ட்ரீட் வியாழன் அன்று அதிகளவிலான வர்த்தகச் சரிவை எதிர்கொண்டது. குறிப்பாக S&P 500 153.30 புள்ளிகள் சரிந்து 4,146.87 ஆகவும், நாஸ்டாக் 647.16 புள்ளிகள் சரிந்து 12,317.69 ஆகவும் இருந்தது. டோவ் ஜோன்ஸ் 1,063.09 புள்ளிகள் அல்லது 3.1% குறைந்து 32,997.97 ஆக இருந்தது.
ஜப்பான்
அமெரிக்காவின் வட்டி விகித தாக்கத்தின் எதிரொலியாக டோக்கியோவின் Nikkei இன்டெக்ஸ் வெள்ளிக்கிழமை சரிவுடன் தொடங்கியது. இதன் மூலம் பெஞ்ச்மார்க் நிக்கி 225 குறியீடு காலை வர்த்தகத்தில் 0.13 சதவீதம் அல்லது 34.24 புள்ளிகள் சரிந்து 26,784.29 ஆக இருந்தது. அதே நேரத்தில் டாபிக்ஸ் குறியீடு 0.21 சதவீதம் அல்லது 4.05 புள்ளிகள் உயர்ந்து 1,902.40 ஆக இருந்தது.
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் மீதான தடை உட்பட ரஷ்யாவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடைகள், சீனாவின் பொருளாதார மந்த நிலை ஆகியவை கச்சா எண்ணெய் தேவையைப் பெரிய அளவில் குறைக்கக்கூடியதாக உள்ளது.
கச்சா எண்ணெய் விலை
இதன் எதிரொலியாக வெள்ளிக்கிழமை ஆசிய வர்த்தகத்தின் தொடக்கத்தில் எண்ணெய் விலை சரிவைச் சந்தித்தது. ப்ரெண்ட் ஃப்யூச்சர்ஸ் 37 சென்ட்கள் அல்லது 0.3% சரிந்து ஒரு பேரல் $110.53 ஆகவும், WTI கச்சா எண்ணெய் 33 சென்ட்கள் அல்லது 0.3% குறைந்து $107.93 ஆகவும் இருந்தது.
பொருளாதார மந்தநிலை
அனைத்திற்கும் மேலாக உலக நாடுகளில் தற்போது பணவீக்கத்தாலும், கொரோனா தொற்றாலும், சப்ளை செயின் பாதிப்பாலும், ரஷ்யா உக்ரைன் போர் காரணமாகவும் பொருளாதார மந்த நிலை உருவாகும் என்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் ரெசிஷன் அச்சம் அதிகரித்துள்ளது, இந்த நிலையில் தான் வட்டி விகிதம் உயர்த்தியும் சந்தை சரிவு உடன் உள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications