மும்பை: கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அது நாளுக்கு நாள் இந்தியாவில் உள்ள மக்களையும் பொருளாதாரத்தினையும் என்ன பாடு படுத்தப் போகிறதோ தெரியவில்லை. இதன் தாக்கம் முதலீட்டாளர்கள் மத்தியில் தொடர்ந்து ஒரு அச்சத்தினை உருவாக்கி வருகிறது எனலாம்.
இதனால் தினசரி இந்திய பங்கு சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றன. இதன் காரணமாக இந்த பங்கு சந்தை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றது. மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் 75.88 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசு இன்று முதல் 21 நாட்களுக்கு லாக்டவுன் உத்தரவினை பிறப்பித்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி, பெட்ரோல் பங்குகள் , மருத்துவமனை என பல அத்தியாவசிய தேவைகள் மட்டும் கிடைக்கும். ஆனால் மற்றவை எல்லாம் முற்றிலும் முடக்கப்பட வேண்டும். மக்கள் அதிகமாக கூடும் இடங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
இதனால் குறிப்பிட்ட துறை சார்ந்த பங்குகள் தவிர மற்ற அனைத்து பங்குகளும் வீழ்ச்சி கண்டுள்ளன. இந்த நிலையில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 119 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 26,554 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. (10.20 மணியளவில்), இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 26 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 7,772 ஆக வர்த்தகமாகியும் வருகிறது.
இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 75.88 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்த நிலையில் என் எஸ் இ குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ், கிரசிம், மாருதி சுசூகி, நெஸ்டில், பிரிட்டானியா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே யெஸ் பேங்க், ஐடிசி, இந்தஸிந்த் பேங்க், லார்சன், ஹெச் சி எல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே பிஎஸ் இ குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ்,, மாருதி சுசூகி, நெஸ்டில், பவர் கிரிட் கார்ப், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஐடிசி, இந்தஸிந்த் பேங்க், லார்சன், ஹெச் சி எல் டெக் எம் & எம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போது சென்செக்ஸ் 59 புள்ளிகள் ஏற்றம் கண்டு 26,733 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 14 புள்ளிகள் ஏற்றம் கண்டு 7,815 ஆகவும் வர்த்தகமாகி (10.45 மணியளவில்) வருகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications