கரடியின் பிடியில் இந்திய சந்தை.. மீண்டும் வீழ்ச்சி கண்ட ரூபாய்!

மும்பை : கடந்த சில நாட்களாக ஏற்றத்தை மட்டுமே தொடர்ந்து கண்டு வந்த இந்திய பங்கு சந்தைகள் இன்று மீண்டும் சரிய ஆரம்பித்துள்ளது.

குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 387 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 38,710 ஆக வர்த்தகமாகி வருகின்றது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 114 புள்ளிகள் சரிந்து 11,474 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.

இதே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.04 ரூபாயாக வீழ்ச்சி கண்டும் காணப்படுகிறது.

கரடியின் பிடியில் இந்திய சந்தை.. மீண்டும் வீழ்ச்சி கண்ட ரூபாய்!

இது மற்ற ஆசிய சந்தைகளின் இழப்புக்கு ஏற்ப இருந்தன என்று கூறப்பட்டாலும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க, அந்த நாட்டு அரசு அழைப்பு விடுத்ததை அடுத்து, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாட்டில் நீண்டகால அரசியல் நிச்சயமற்ற தன்மைக்காக வாய்ப்புகளை இது அதிகரித்தது என்ற எண்ணத்தையே உருவாக்கியுள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு நிச்சயமற்ற போக்கை உருவாக்கியதோடு, முதலீடு குறித்தான பயத்தையும் உருவாக்கியுள்ளது.

இதனால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை பாதுகாப்பாக வெளியே எடுக்க தொடங்கியுள்ளனர். அதிலும் இந்திய பங்கு சந்தைகளை பொறுத்தவரை, குறுகிய கால வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் ஃபுராஃபிட் புக்கிங் செய்வதாலும் இந்த வீழ்ச்சி என்றும் கூறப்படுகிறது.

மேலும் தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் டீசல் விலையும் அதிகரித்துக் கொண்டிப்பதால், மீண்டும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிய ஆரம்பித்துள்ளது. இது தவிர மத்திய அரசு 5 முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கவுள்ளதாக செய்திகள் வெளியானதையடுத்து இந்த வீழ்ச்சியானது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் இண்டெக்ஸ் குறியீடுகளில் சில குறியீடுகளை தவிர அனைத்தும் சரிவிலேயே காணப்படுகிறது.

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், மகேந்திரா & மகேந்திரா, எஸ்.பி.ஐ, ஈச்சர் மோட்டார், மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும், இதே பவர் கிரிட் கார்ப், என்.டி.பி.சி, டி,சி,எஸ், ஐ.ஓ.சி, ஹெச்.சி.எல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும் உள்ளன.

இதே சென்செக்ஸ் குறியீட்டில் பவர் கிரிட் கார்ப், என்.டி.பி.சி, டி,சி,எஸ், ஹெச்.சி.எல் டெக், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டாடா மோட்டார்ஸ், மகேந்திரா & மகேந்திரா, எஸ்.பி.ஐ, மாருதி சுசூகி, ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+