மீண்டும் கரடியின் பிடியில் சிக்கிய காளை.. 540 புள்ளிகள் வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ்..!

வாரத்தின் முதல் நாளான இன்று காலை நேரத்திலேயே இந்திய சந்தைகள் சற்று சரிவிலேயே தொடங்கியது. முடிவிலும் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 540 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 40,145 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 162 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 11,767 ஆகவும் முடிவடைந்துள்ளது.

இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.77 ரூபாயாக, இன்று காலையில் தொடங்கிய நிலையில், தற்போது 73.85 ரூபாயாக சரிவடைந்து காணப்படுகிறது. நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சரிவிலேயே முடிவடைந்துள்ளது. குறிப்பாக நிஃப்டி ஆட்டோ, நிஃப்டி மெட்டல் குறியீடுகள் 3 சதவீதத்திற்கும் மேலாக சரிந்து காணப்பட்டது. அதோடுசென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அனைத்து இன்டெக்ஸ்களும் சரிவிலேயே காணப்படுகின்றது.

மீண்டும் கரடியின் பிடியில் சிக்கிய காளை.. 540 புள்ளிகள்  வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ்..!

நிஃப்டி குறியீட்டில் உள்ள நெஸ்டில், இந்தஸிந்த் வங்கி, ஹெச்டிஎஃப்சி லைஃப், கோடக் மகேந்திரா, பவர் கிரிட் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், ஜேஎஸ்டபள்யூ, ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, ஹிண்டால்கோ, எம் & எம் உள்ளிட்ட பங்குகள் பலத்த சரிவிலும் காணப்படுகின்றது.

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள நெஸ்டில், கோடக் மகேந்திரா, இந்தஸிந்த் வங்கி, பவர் கிரிட் கார்ப், ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா, பஜாஜ் ஆட்டோ எம் & எம் உள்ளிட்ட பங்குகள் பலத்த சரிவிலும் காணப்படுகின்றது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் இது இரண்டாம் கட்ட பரவலாக இருக்குமோ என்ற பய உணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொருளாதாரம் என்னவாகுமோ என்ற பய உணர்வு முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் சர்வதேச சந்தைகள் சரிவினை காணலாம் என்ற உணர்வே காணப்படுகிறது. இதன் காரணமாக இந்திய பங்கு சந்தைகள் மற்றும் சர்வதேச பங்கு சந்தைகள் சிலவும் சரிவில் காணப்படுகின்றது.

அதோடு கடந்த வாரத்திலேயே சரிவிலேயே முடிவடைந்திருந்த எண்ணெய் விலைகள், மீண்டும் இன்றும் சரிவில் தான் காணப்படுகிறது. இது ரூபாய்க்கு ஆதரவாக இருந்தாலும், அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், சர்வதேச சந்தைகளின் அழுத்தமும் இந்திய பங்கு சந்தையில் காணப்படுகின்றது,.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+