வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய சந்தைகள் சற்று சரிவிலேயே தொடங்கியது. இந்த நிலையில் தற்போது மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 95 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 40,590 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 30 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 11,899 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.
இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.69 ரூபாயாகவும் வீழ்ச்சி கண்டும் காணப்படுகின்றது. இது தொடக்கத்தில் 17 பைசா வீழ்ச்சி கண்டு 73.77 ரூபாயாக காணப்பட்டது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் இது இரண்டாம் கட்ட பரவலாக இருக்குமோ என்ற பய உணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொருளாதாரம் என்னவாகுமோ என்ற நிலையில், சர்வதேச சந்தைகள் சில சரிவில் காணப்படுகின்றது. இதற்கிடையில் இந்தியாவில் கொரோனாவின் வேகம் குறைந்தபாடில்லை.
இதன் காரணமாக இந்திய பங்கு சந்தைகள் மற்றும் சர்வதேச பங்கு சந்தைகள் சிலவும் சரிவில் காணப்படுகின்றது.
கடந்த வாரத்தில் சரிவிலேயே முடிவடைந்திருந்த எண்ணெய் விலைகள், மீண்டும் இன்றும் சரிவில் தான் காணப்படுகிறது. இது ரூபாய்க்கு ஆதரவாக இருந்தாலும், அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், சர்வதேச சந்தைகளின் அழுத்தமும் இந்திய பங்கு சந்தையில் காணப்படுகின்றது,.
இதற்கிடையில் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும், சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அனைத்து இன்டெக்ஸ்களும் சரிவிலேயே காணப்படுகின்றது.
நிஃப்டி குறியீட்டில் உள்ள நெஸ்டில், இந்தஸிந்த் வங்கி, ஹெச்டிஎஃப்சி லைஃப், அதானி போர்ட்ஸ், லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், ஜேஎஸ்டபள்யூ, ஹீரோ மோட்டோகார்ப், யுபிஎல், ரிலையன்ஸ், கோல் இந்தியா உள்ளிட்ட பங்குகள் பலத்த சரிவிலும் காணப்படுகின்றது.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள நெஸ்டில், இந்தஸிந்த் வங்கி, லார்சன், பவர் கிரிட் கார்ப், ஹெச்சிஎல் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், ஏசியன் பெயிண்ட்ஸ், டெக் மகேந்திரா, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் பலத்த சரிவிலும் காணப்படுகின்றது.
இதுவே ஐசிஐசிஐ லம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமையன்று 35% வளர்ச்சி கண்டதையடுத்து, செப்டம்பர் காலாண்டில் 415.74 கோடி ரூபாய் லாபம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இந்த பங்கின் விலையானது 0.4% வீழ்ச்சி கண்டுள்ளது.
ஜேஎஸ்டபள்யூ நிறுவனத்தின் நிகரலாபம் செப்டம்பர் காலாண்டில் 37% வீழ்ச்சி கண்டு, நிகரலாபம் 1595 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 2,536 கோடி ரூபாய் லாபம் கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 3% மேலாக வீழ்ச்சி கண்டுள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications