6 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ் குறியீடு..!
இன்று பங்குச்சந்தை வர்த்தகம் உயர்வுடன் துவங்கினாலும் மதிய நேர வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்ய துவங்கினர்.
இதனால் வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு கணிசமான சரிவை தழுவியது.

புதன்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 5.94 புள்ளிகள் சரிவில் 26,298.69 புள்ளிகளை அடைந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை போல் துவக்கத்தில் லாபத்தை சந்தித்தாலும், வர்த்தக முடிவில் மிகவும் குறைந்த அளவிலான மாற்றத்தை மட்டுமே கண்டது. வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 3.15 புள்ளிகள் உயர்ந்து 8,111.60 புள்ளிகளை எட்டியது.


Click it and Unblock the Notifications