நாட்டின் முன்னணி வர்த்தகக் குழுமமாகத் திகழும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் விலை இலக்கை கோல்டுமேன் சாச்சஸ் அமைப்பு 1,205 ரூபாய் வரையில் உயர்த்தியுள்ள நிலையில் இன்று முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தின் மீதும் பார்மா துறை சார்ந்த நிறுவனங்கள் மீதும் அதிகளவிலான முதலீட்டைச் செய்தனர்.
இதன் காரணமாக இன்று காலை வர்த்தகம் துவங்கிய முதல் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு நிலையான வர்த்தக உயர்வுடன் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்தது.

ஐரோப்பிய சந்தை துவக்கத்தில் சென்செக்ஸ் குறியீடு 200 புள்ளிகள் உயர்வில் இருந்து 100 புள்ளிகள் வரையில் சரிந்து காணப்பட்டது.
இதன் வாயிலாக இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 118.45 புள்ளிகள் உயர்ந்து 33,478.35 புள்ளிகளை அடைந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடு 28.15 புள்ளிகள் உயர்ந்து 10,326.90 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் எஸ்அண்ட்பி குறியீட்டில் இருக்கும் டாப் 30 பங்குகளில் டாக்டர் ரெட்டி, சன்பார்மா, சிப்லா, பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் 2.13 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்தது.


Click it and Unblock the Notifications