அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிப்புகளைத் தாண்டி சுமார் 7.2 சதவீதம் வரையிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.
இதன் எதிரொலியாக வியாழக்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் சென்செக்ஸ் 80 புள்ளிகள் வரையிலான உயர்வைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கச் சந்தை
அமெரிக்கப் பெடரல் வங்கியின் முடிவுகளால் ஆசிய சந்தையில் இன்று மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்தது. இதன் வாயிலாக இந்திய சந்தையிலும் குறைந்த அளவிலான முதலீட்டை மட்டுமே அன்னிய முதலீட்டாளர்கள் செய்தனர்.
இதனால் 80 புள்ளிகள் வரையில் உயர்ந்த சென்செக்ஸ் சில நிமிடங்களிலேயே சரிவை சந்தித்தது.
வங்கி பங்களுகள்
இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி வங்கி பங்குகள் 1.87 சதவீதம் வரையில் சரிந்தது. இதனுடன் இந்திய வங்கி, கனரா வங்கி மற்றும் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி பங்குகள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 137.10 புள்ளிகள் வரையில் சரிந்து 34,046.94 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 34.50 புள்ளிகள் சரிந்து 10,458.35 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவிற்கு வந்தது.
விடுமுறை
நாளை ஹோலி பண்டிகையை முன்னிட்டு பங்குச்சந்தை, நாணய சந்தை, கமாடிட்டி சந்தைகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமையே மீண்டும் வர்த்தகம் துவங்கப்படும்.


Click it and Unblock the Notifications