சீனா மற்றும் அமெரிக்க நாட்டுகள் மத்தியில் வர்த்தகப் போர் வெடிக்கும் அபாயம், மற்றும் இத்தாலியில் ஏற்பட்டுள்ள நிலையற்ற அரசியல் போன்றவை உலக நாடுகளின் ஜிடிபி வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக உருவாகியுள்ளது.
இதன் பாதிப்புகள் முதலில் பங்குச்சந்தையைத் தாக்கும் என்பதால் ஆசிய முதலீட்டாளர்கள் இன்று கவனமாகத் தங்களது முதலீட்டைப் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்றி யென் மற்றும் தங்கம் மீது திருப்பினர்.
இதனால் ஆசிய பங்குச்சந்தை மந்தமான வர்த்தகத்தைப் பெற்றது.
மும்பை பங்குச்சந்தை
சீனா மற்றும் அமெரிக்க நாட்டுகள் மத்தியில் வர்த்தகப் போர் வந்தால் என்ன ஆகும் என்பதை ஏற்கனவே தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் நாம் பார்த்துள்ள நிலையில், இன்று வர்த்தகத் துவக்கம் முதலே ஆசிய சந்தையின் தாக்கத்தின் வாயிலாகச் சுமார் சரிவிலேயே வர்த்தகம் துவங்கியது.
ஐரோப்பிய சந்தை
ஐரோப்பிய சந்தை துவங்கிய பின்பு மும்பை பங்குச்சந்தையில் கணிசமான உயர்வு இருந்தாலும், லாபகரமான நிலைக்கு உயரவில்லை.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 300.16 புள்ளிகள் வரையில் சரிந்து 33,746.78 புள்ளிகளை அடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 99.50 புள்ளிகள் சரிந்து 10,358.85 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவிற்கு வந்தது.
முக்கிய நிறுவனங்கள்
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் சன் பார்மா, டிசிஎஸ் ஆகியவை 2 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி அடைந்துள்ளது, அதேபோல் மஹிந்திரா, எஸ்பிஐ, கோட்டாக் வங்கி, என்டிபிசி ஆகியவை கணிசமான வர்த்தகத்தை அடைந்துள்ளது.
சண்டை முற்றியது..!
இந்தியா
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications