அமெரிக்கா மற்றும் ஆசிய சந்தையின் வர்த்தக உயர்வின் காரணமாக இன்று மும்பை பங்குச்சந்தையில் முதலீட்டு அளவுகள் அதிகரித்தது. இதன் வாயிலாக வியாழக்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு தொடர்ந்து உயர்வைச் சந்தித்தது.
இன்றைய வர்த்தகத்தில் ஐடி, பார்மா ஆகிய துறைகளில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.

வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 330.45 புள்ளிகள் உயர்ந்து 34,413.16 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு தொடர் உயர்வில் 100.15 புள்ளிகள் உயர்ந்து 10,576.85 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தையின் எஸ்அண்ட்பி குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்று சன் பார்மா, டாக்டர் ரெட்டி, எஸ்பிஐ, இன்போசிஸ், ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் 1.5 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications