சர்வதேச பங்கு சந்தையின் எதிரொலியாக, தொடக்கத்திலேயே இந்திய பங்கு சந்தைகள் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக ஏற்றத்திலேயே தொடங்கியது.
இந்த நிலையில் சந்தையின் முடிவிலும் ஏற்றம் கண்டுள்ளது. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 629 புள்ளிகள் அதிகரித்து, 38,697 ஆக முடிவடைந்தது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 169 புள்ளிகள் அதிகரித்து 11,417 ஆக அதிகரித்துள்ளது. இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 73.14 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சரி என்ன காரணம் இன்று காலை தொடக்கம் முதல் கொண்டே சந்தை நல்ல ஏற்றத்தில் இருந்து வருகிறதே. அதுவும் கொஞ்சம் நஞ்சமல்ல இரண்டு குறியீடுகளும் 3% மேலாக ஏற்றம் கண்டுள்ளது. நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் முறையே 0.8 சதவீதம் மற்றும் 0.6% ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன.
நிஃப்டி 50 குறியீட்டில் ஐந்து சிறந்த பங்குகளில், நான்கு நிதி சார்ந்த பங்குகளும் உள்ளன. இதில் இந்தஸிந்த் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டின. ஆனால் அதே நேரம் டாக்டர் டெட்டி லெபாரட்டீஸ், ஐடிசி, ஓஎன்ஜிசி, என்டிபிசி மற்றும் டைட்டன் உள்ளிட்ட பங்குகள் சற்று சரிவினைக் கண்டுள்ளன.
ரிலையன்ஸ் ரீடெயிலில் மீண்டும் ரூ.1,875 கோடி முதலீடு.. சில்வர் லேக்கின் இணை முதலீட்டாளர்கள்..!
நிஃப்டி தலைமையிலான அனைத்து துறை குறியீடுகளும் 3.6 சதவீதத்திற்கும் மேல் திரண்டன. நிஃப்டி பைனான்ஷியல் சர்வீசஸ் மற்றும் நிஃப்டி மீடியாவும் தலா 3 சதவீதம் சேர்த்தன. இதே நிஃப்டி ஐடி மற்றும் நிஃப்டி 0.8% ஏற்றம் கண்டுள்ளன.
இதே மத்திய அரசு லாக்டவுனில் படிப்படியான தளர்வுகளை அளித்து வரும் நிலையில், இந்த முறை அறிவிப்பில், அக்டோபர் 15 முதல் தியேட்டர்கள் இயங்க அனுமதி கொடுத்துள்ளது. பல மாதங்களாகவே லாக்டவுன் காரணமாக முடங்கிபோன தியேட்டர்களுக்கு 50% ஆக்கிரமிப்புகளுடன் இயங்கலாம் என அனுமதி கொடுத்துள்ளது. இதன் காரணமாக தியேட்டர் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டு வருகின்றன. குறிப்பாக இன்று காலை நேர வர்த்தகத்தில் பிவிஆர் மற்றும் ஐனாக்ஸ் லெய்ஷர் முறையே 15% மற்றும் 17% ஏற்றத்தில் காணப்படுகிறது. இதே முடிவில் பிவிஆர் மற்றும் ஐனாக்ஸ் லெய்ஷர் முறையே 8% மற்றும் 6% ஏற்றத்தில் காணப்படுகிறது