சென்செக்ஸ் 63 புள்ளிகள் உயர்வு: நிப்டி 6 புள்ளிகள் உயர்வு..!
சென்சென்ஸ் மற்றும் நிப்டி இரண்டு குறியீடுகளும் வெள்ளிக்கிழமை லாபத்துடன் முடிந்தன. ஜிஎஸ்டி வரியில் நிலுவையில் உள்ள மசோதாக்கள் முடிவுக்கு வந்த நிலையில் நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.
தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி 6.35 புள்ளிகள் அதாவது 0.07 சதவீதம் உயர்ந்து 9,160.05 புள்ளிகளுடனும், மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 63.14 புள்ளிகள் அதாவது 0.21 சதவீதம் உயர்ந்து 29,648.99 புள்ளிகளுடன் இன்றைய வர்த்தக நேர முடிவில் பங்குச் சந்தை முடிந்தது.

மும்பை பங்குச் சந்தையைப் பொருத்த வரை 2.41 சதவீதம் வரை நுகர்பொருள் சந்தை நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.
இன்று பங்குச் சந்தையில் லாபம் பார்த்த 5 நிறுவனங்கள் என்றால் எம் & எம் சர்வீசஸ் 5.71 சதவீதம், சாட்பவ் இன்ஜினியரிங் 5.48 சதவீதமும், டோரண்ட் பார்மா 5.48 சதவீதமும்ப், ரட்டன இந்தியா பவர் நிறுவனப் பங்குகள் 5.27 சதவீதமும், டாடா எல்க்ஸ்சி லிமிடெட் பங்குகள் 4.92 சதவீதமும் உயர்ந்தன.
ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் 5.72 சதவீதுமும், ஐடியா செல்லுலார் லிமிடெட் 4.47 சதவீதமும், பார்தி ஏர்டெல் 3.73 சதவீதமும், வா டெக் வாப்க் லிமிடட் 3.12 சதவீதம் பங்குகளின் விலை சரிந்தன.


Click it and Unblock the Notifications