மும்பை: இன்று காலை தொடக்கத்திலேயே சற்று ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய சந்தையானது, முடிவிலும் ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது.
குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 1256.66 புள்ளிகள் ஏற்றம் கண்டு 31,159.62 ஆக முடிவடைந்துள்ளது. இது 4.23% ஏற்றமாகும்.
இதே தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 363.15 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 9,111.90 ஆக முடிவடைந்துள்ளது. இது கிட்டதட்ட 4.15% ஏற்றமாகும். இதே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 76.42 ரூபாயாகவும் உள்ளது.
இவை எல்லாம் டாப் கெயினர்
இன்று 1836 பங்குகள் ஏற்றத்துடனும், 540 பங்குகள் சரிவுடனும் காணப்படுகிறது. இதே 170 பங்குகள் எந்த மாற்றமும் இல்லாமல் வர்த்தகமாகியும் முடிவடைந்துள்ளது. குறிப்பாக எம்&எம், மாருதி சுசூகி, சிப்லா, டாடா மோட்டார்ஸ் மற்றும் டைட்டன் நிறுவனம் நிஃப்டி குறியீட்டில் டாப் கெயினராக உள்ளன.
டாப் லூசர்
இதே ஹெச்.யு.எல், டெக் மகேந்திரா, டாக்டர் ரெட்டி லேபாரட்டீஸ், இந்தஸ்இந்த் பேங்க் மற்றும் யுபிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆட்டோமொபைல் துறை 10% ஏற்றத்துடனும், இதனை தொடர்ந்து மெட்டல், பார்மா, இன்ஃப்ரா மற்றும் எனர்ஜி துறை குறியீடுகள் ஏற்றத்துடன் காணப்பட்டன.
நிதி உதவி
இதே பிஎஸ்இ மிட் கேப் அன்ட் ஸ்மால்கேப் குறியீடுகளும் 3% ஏற்றத்துடனும் காணப்பட்டது. அதிலும் அரசு விரைவில் கொரோனா மீட்பு நிதியாக மீண்டும் 1 லட்சம் கோடி ரூபாய்க்கான நிதியினை அறிவிக்கப்படலாம் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன. இந்த புதிய திட்டம் சிறு குறு நிறுவனங்களுக்கு மீட்பாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
என்ன காரணம்
கடந்த சில தினங்களுக்கு முன்பு கிரிசில் அறிக்கை மகேந்திரா அன்ட் மகேந்திரா, அதன் மதிப்பீட்டை உயர்த்திய பின்னர், அதன் பங்கு விலையானது தொடர்ச்சியாக நான்காவது நாளாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இன்று மட்டும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே போல் என்.சிஎல் இந்தியா அதன் சுரங்க வேலையை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், அதன் பங்கு விலையானது 6.7% அதிகரித்துள்ளது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications