உலக நாடுகளில் தற்போது கிருஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் நிலையில், முதலீட்டுச் சந்தைகள் மந்தமான காணப்படுகிறது. இதனால் இன்று காலை வர்த்தகம் துவங்கும்போது கூட மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு குறைவான உயர்வில் துவங்கியது.
ஐரோப்பிய சந்தை
அதன்பின் மதிய நேர வர்த்தகத்தில் பல சரிவுகளைச் சந்தித்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் கணிசமான உயர்வைக் கண்டது.
சென்செக்ஸ்
இதன் காரணமாக இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 70.31 புள்ளிகள் உயர்ந்து 34,010.61 புள்ளிகளை அடைந்து, முதல் முறையாக 34,000 புள்ளிகளைத் தாண்டி முடிவடைந்துள்ளது.
நிஃப்டி
அதேபோல் நிஃப்டி குறியீடும் 38.50 புள்ளிகள் உயர்ந்து 10,531.50 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் பார்தி ஏர்டெல், சன்பார்மா, யெஸ் வங்கி, டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, டாக்டர் ரெட்டி ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான உயர்வைச் சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications