களைகட்டிய சென்செக்ஸ், நிஃப்டி.. முதல் நாளே கல்லா கட்டிய ஐஆர்சிடிசி!

மும்பை: வாரத்தின் முதல் நாளான இன்று ரூபாயின் மதிப்பு சற்று சரிந்திருந்தாலும், இன்று காலையில் இருந்தே இந்திய பங்கு சந்தைகள் சற்று ஏற்றத்திலேயே வர்த்தகமாகி வந்தன.

இன்று காலை முதலே நல்ல ஏற்றத்தில் இருந்த இந்திய பங்கு சந்தைகள், முடிவில் சற்று இறங்கியிருந்தாலும், சற்று ஏற்றத்திலேயே முடிவடைந்தன. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 87 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 38,214 ஆக வர்த்தகமாகியும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 36 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,341 ஆக வர்த்தகமாகியும் முடிவடைந்தது.

களைகட்டிய சென்செக்ஸ், நிஃப்டி.. முதல் நாளே கல்லா கட்டிய ஐஆர்சிடிசி!

இதே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று வீழ்ச்சி கண்டு, 71.16 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. இன்று காலையில் இருந்தே பெரிய அளவில் ஏதும் மாற்றமின்றியே இருந்த ரூபாயின் மதிப்பு, இந்திய சந்தைகள் முடிவில் சற்று வீழ்ச்சியுடனேயே காணப்பட்டது.

இந்த நிலையில் இன்றைய பங்கு சந்தையில் ஹைலைட்டான விஷயமாக ஐஆர்.சி.டிசி பங்கு விலை ஆரம்பித்த முதல் நாளிலேயே கல்லா கட்டி வருகிறது. 644 ரூபாய்க்கு ஆரம்பமான இந்த பங்கின் விலை, முடிவில் 727 ரூபாயாக முடிவடைந்தது.

இதே நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் இண்டெக்ஸ்களில் நிஃப்டி ஐடி, சென்செக்ஸ் குறியீட்டில் டெக் குறியீடு தவிர அனைத்தும் ஏற்றத்திலேயே காணப்பட்டன. குறிப்பாக பேங்க் நிஃப்டி மற்றும் நிஃப்டி ஆட்டோ குறியீடு நல்ல ஏற்றத்துடனும், இதே சென்செக்ஸ் குறியீட்டில் ஹெல்த்கேர், மெட்டல்ஸ், ஆயில் & கேஸ் உள்ளிட்ட குறியீடுகளும் நல்ல ஏற்றத்திலும் காணப்பட்டன.

இதே நிஃப்டி இண்டெக்ஸில் டாடா மோட்டார்ஸ், ஓ.என்.ஜி.சி, அல்ட்ராடெக் சிமெண்ட், பார்தி ஏர்டெல், சன்பார்மா உள்ளிட்ட பங்குகள் நல்ல ஏற்றத்துடனும், இதே இன்ஃபோசிஸ், பவர் கிரிட் கார்ப், பஜாஜ் ஃபைனான்ஸ், அதானி போர்ட் மற்றும் பஜான் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்பட்டன.

இதே பிஎஸ்இ இண்டெக்ஸில் டாடா மோட்டார்ஸ், ஓ.என்.ஜி.சி, பார்தி ஏர்டெல், சன் பார்மா, இந்தஸ்இந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் நல்ல ஏற்றத்துடனும், இதே இன்ஃபோசிஸ், பவர் கிரிட் கார்ப், பஜாஜ் ஃபைனான்ஸ், லார்சன், கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றன.

மேலும் நடப்பு திருவிழா பருவத்தில் ஆட்டோமொபைல் துறையில் விற்பனை அதிகரிக்கும் என்றும், இதனால் இத்துறை சார்ந்த நிஃப்டி ஆட்டோ குறியீடு நல்ல ஏற்றத்தில் உள்ளது என்றும், அடுத்த ஏப்ரல் 2020க்குள் நிஃப்டி 12,800 லெவலை தொடலாம் என்றும் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+