வாரத்தின் முதல் நாளான இன்று காலை தொடக்கத்திலேயே சந்தை புதிய உச்சத்தில் தான் தொடங்கியது.
குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 350 புள்ளிகள் அதிகரித்து, 44,232 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 95 புள்ளிகள் அதிகரித்து, 12,954 ஆகவும் தொடங்கியது. .
இந்த நிலையில் அப்போது 1,013 பங்குகள் ஏற்றத்திலும், 325 பங்குகள் சரிவிலும், 69 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிக மாற்றமில்லாமல் 74.13 ரூபாயாக தொடங்கியது.
இதற்கிடையில் நிஃப்டி, சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள வங்கி மற்றும் கன்சியூமர் குறியீடுகள் தவிர அனைத்து குறியீடுகளும் ஏற்றத்திலேயே காணப்படுகிறது.
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஓஎன்ஜிசி, இந்தஸ்இந்த் வங்கி, கெயில், டாக்டர் ரெட்டி லேபாரட்டீஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, எஸ்பிஐ, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஓஎன்ஜிசி, இந்தஸ்இந்த் வங்கி, இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா, பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும் ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, எஸ்பிஐ, எம் &எம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.
இதற்கிடையில் காலையில் ஏற்றத்தில் தொடங்கிய நிலையில், முடிவில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 194.90 புள்ளிகள் அதிகரித்து, 44,077.15 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 67.50 புள்ளிகள் அதிகரித்து, 12,926.50 ஆகவும் முடிவடைந்துள்ளது. இதில் 1,636 பங்குகள் ஏற்றத்திலும், 1133 பங்குகள் சரிவிலும், 178 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது.
இன்று சந்தை சாதகமாக முடிவடைந்துள்ளதாலும், இந்த வாரத்தில் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி வரவுள்ளதால், சந்தை பெரியளவிலான ஏற்ற இறக்கத்தினை காணலாம். ஆக இதனையும் முதலீட்டாளர்கள் கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. அதேபோல் கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றிய செய்திகள் சாதகமாக வந்தாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனாவால் சந்தை ஏற்ற இறக்கத்தினை சந்திக்கலாம்.