வாரத்தின் நான்காவது நாளான இன்றும் இந்திய பங்கு சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்திலேயே முடிவடைந்துள்ளன. அதிலும் இன்று காலையில் சரிவில் தொடங்கி, பின் ஏற்றம் கண்டு, ஏற்றத்திலேயே முடிவடைந்துள்ளன.
குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 358.54 புள்ளிகள் அதிகரித்து, 50,614.29 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 105.70 புள்ளிகள் அதிகரித்து, 14,895.65 ஆகவும் வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.
குறிப்பாக பொதுத்துறை வங்கி பங்குகள் மற்றும் மெட்டல் பங்குகள் ஏற்றம், சந்தை ஏற்றத்திற்கு ஏதுவாக அமைந்தது.
ரூபாய் மதிப்பு
இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.96 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது தொடக்கத்தில் 72.94 ரூபாயாக தொடங்கியது. இது முந்தைய அமர்வில் 72.96 ஆக முடிவுற்ற நிலையில், இன்று மீண்டும் அதே நிலையில் முடிவடைந்துள்ளது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் நிஃப்டி ஐடி தவிர மற்ற, நிஃப்டி சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகிறது. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஐடிசி, எஸ்பிஐ, பஜாஜ் பைனான்ஸ், கோல் இந்தியா, ஓஎன்ஜிசி பங்குகள் டாப் கெயினராகவும், ஏசியன் பெயின்ட்ஸ், யுபிஎல், சிப்லா, இந்தஸிந்த் வங்கி, டாடா மோட்டார்ஸ், உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஐடிசி, எஸ்பிஐ, பஜாஜ் பைனான்ஸ், ஓஎன்ஜிசி, எம்&எம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், ஏசியன் பெயின்ட்ஸ், இந்தஸிந்த் வங்கி, பார்தி ஏர்டெல், டெக் மகேந்திரா, டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது..
என்ன காரணம்?
அமெரிக்கா பங்கு சந்தைகள் ஏற்றம், பட்ஜெட் 2021 எதிரொலி, அன்னிய முதலீடுகள் வரத்து உள்ளிட்ட பல காரணங்களினால் சந்தை தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வருகின்றது. அதோடு அமெரிக்க பத்திர லாபம், டாலர் மதிப்பு உள்ளிட்டவை சர்வதேச சந்தைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக ஆசிய சந்தைகளும் ஏற்றம் கண்டு வருகின்றன. இதுவும் சந்தையின் ஏற்றத்திற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications