மும்பை : கடந்த சில தினங்களாக தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்த இந்திய பங்கு சந்தை, இன்று காலை பெரிய அளவில் மாற்றம் இல்லாது இருந்தாலும், மதியத்துக்கும் மேல் சீறிப் பாய்ந்தன.
இது foreign portfolio investors (FPIs) வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்களுக்கான, அதிக வரியிலிருந்து சற்று விலக்கு அளிக்கப்படலாம் என்ற செய்திகள் வெளியானதையடுத்தும், மேலும் 2 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள தனி நபர்களுக்கான வரி பற்றிய மாற்றமும் இருக்கலாம் என்ற செய்திகள் வெளியான பின்பே சந்தை இந்த ஏற்றத்தை கண்டது என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்துடனேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 636 புள்ளிகள் ஏற்றம் கண்டு 37,327 ஆக முடிவடைந்துள்ளது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 176 புள்ளிகள் அதிகரித்து 11,032 ஆக முடிவடைந்தது.
எனினும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு காலையில் சற்று வீழ்ச்சியுடன் காணப்பட்டாலும், தற்போது 70.67 ரூபாயாக சற்றே அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இந்திய பங்கு சந்தைகள் மட்டும் அல்லாது, சர்வதேச சந்தைகளும் நல்ல ஏற்றத்துடனேயே காணப்படுகின்றன. குறிப்பாக DAX குறியீடு 101 புள்ளிகள் அதிகரித்தும், CAC சந்தை 71 புள்ளிகள் அதிகரித்தும், எஃப்.டி.எஸ்.இ 21 புள்ளிகள் அதிகரித்தும் காணப்படுகிறது.
இதில் நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹெச்.சி.எல் டெக் 6.41 சதவிகித ஏற்றத்துடனும், டாடா மோட்டார்ஸ் 5.66 சதவிகித ஏற்றத்துடனும், ஜே.எஸ்.டபள்யூ 4.45 சதவிகித ஏற்றத்துடனும், எம் & எம, ரிலையன்ஸ் தலா 4 சதவிகித ஏற்றத்துடனும் டாப் கெய்னராகவும், இதுவே டாடா ஸ்டீல் மற்றும் சிப்லா தலா 3 சதவிகித வீழ்ச்சியுடனும், அல்ட்ராடெக் சிமெண்ட் 2 சதவிகித வீழ்ச்சியுடனும் டாப் லூசர்களாக இருந்தன.
இதுவே சென்செக்ஸ் குறியீட்டில் ஹெச்.சி.எல் மற்றும் டாடா மோட்டார்ஸ் 6 சதவிகிதம் அதிகரித்தும், எம் & எம், பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் 4 சதவிகித ஏற்றத்துடனும் டாப் கெயினராக இருந்தன. இதுவே டாடா ஸ்டீல், சிப்லா, அல்ட்ரா டெக் சிமெண்ட், இந்தியா புல்ஸ், இந்தஸ்இந்த் பேங்க் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்பட்டன.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications