வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் மீண்டும் ஒரு உச்சத்தை எட்டியுள்ளன.
அமெரிக்க உற்பத்தி மற்றும் வேலைகள் மற்றும் மிதமிஞ்சிய ஐரோப்பிய தொழிற்சாலை வளர்ச்சி போன்ற உற்சாகமான தகவல்கள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளன.
பிஎஸ்ஈ
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 0.44 சதவீதம் அதாவது 135.70 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சமாக 31,273.29 புள்ளிகளைத் எட்டியது.
நிப்டி
தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி 0.39 சதவீதம் அதாவது 37.4 புள்ளிகளுடன் 9,653.30 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டில் உயர்வை சந்தித்த துறைகள்
மும்பை பங்கு சந்தைக் குறியீட்டு நிறுவனங்களில் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் 1.22 சதவீதமும், மருத்துவத் துறை நிறுவனப் பங்குகள் 1.12 சதவீதமும், நுகர்வோர் சாதனங்கள் துறை நிறுவனப் பங்குகள் 1.1 சதவீதமும், ஆற்றல் திறன் நிறுவனப் பங்குகள் 0.73 சதவீதமும் உயர்ந்துள்ளன. தே நேரம் எண்ணெய் மற்றும் எரிவாயு, மூலதன பொருட்கள், மற்றும் மெட்டல் நிறுவனப் பங்குகள் நட்டத்தைச் சந்தித்துள்ளன.
டாப் 5 லாபம் அளித்த பங்குகள்
ஹீரோ மோட்டோகார்ப் (+ 2.82%), சிபலா (+ 2.63%), அதானி துறைமுகம் (+ 2.13%), விப்ரோ (+ 1.88%) மற்றும் ஹெச்.டி.எஃப்.சி (+ 1.74%
டாப் 5 நட்டம் அளித்த பங்குகள்
கெயில் (-1.47%), டாடா ஸ்டீல் (-1.27%), பவர் கிரிட் (-0.77%), ஐசிஐசிஐ வங்கி (-0.62%) மற்றும் எச்.யூ.எல் (-0.5%)


Click it and Unblock the Notifications