மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து 4 நாட்களாக உயர்ந்து வரும் நிலையில் இன்றைய வர்த்தகத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அதிகளவிலான முதலீட்டின் காரணமாகச் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு இன்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மற்றும் கார்பரேட் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளை எதிர்நோக்கி இந்திய பங்குச்சந்தையில் தற்போது அதிகளவிலான முதலீடு குவிந்த வருகிறது. திங்கட்கிழமை (22-01-2018) வர்த்தகத்தில் கூடச் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு அதிகளவிலான உயர்வைச் சந்தித்துப் புதிய உச்சத்தைப் பதிவு செய்தது.

ஆனால் ஜனவரி மாதத்தில் தொடர் விடுமுறைகள், லாப நோக்கத்திற்காக அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகள் விற்பனை, ஜனவரி மாத ஆர்டர்கள் முடிவு ஆகியவற்றின் பாதிப்புகளை நாம் தடுக்க முடியாது.
திங்கட்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 286.43 புள்ளிகள் உயர்ந்து 35,798.01 புள்ளிகளை அடைந்துள்ளது, அதேபோல் நிஃப்டி குறியீடு 71.50 புள்ளிகள் உயர்ந்து 10,966.20 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications