நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள், இன்று காலை தொடக்கத்திலேயே சரிவில் தொடங்கின. இந்த நிலையில் முடிவிலும் 1,170 புள்ளிகளுக்கும் மேலாக சரிவில் காணப்படுகின்றது.
இன்று காலை தொடக்கத்தில் சென்செக்ஸ் 202.56 புள்ளிகள் குறைந்து, 59,433.45 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 56.30 புள்ளிகள் குறைந்து, 17,708.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
முடிவில் பலவேறு சாதகமான காரணிகளுக்கு மத்தியில் 2% குறியீடுகள் சரிவில் காணப்படுகிறது.
முடிவு நிலவரம்
சென்செக்ஸ் 1170.12 புள்ளிகள் அல்லது 1.96% குறைந்து 58,465.89 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 348.30 புள்ளிகள் குறைந்து அல்லது 1.96% சரிந்து, 17,416.50 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் 842 பங்குகள் ஏற்றத்திலும், 2479 பங்குகள் சரிவிலும், 157 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகின்றது.
இன்டெக்ஸ் நிலவரம்
இன்றைய சரிவுக்கும் மத்தியில் நிஃப்டி ஆட்டோ மற்றும் பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ ஆயில் & கேஸ் உள்ளிட்ட குறியீடுகள் 3% மேலாக வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளன. இதுவே நிஃப்டி பிஎஸ்இ, பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப், பேங்க் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் 2% மேலாகவும் சரிவில் காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் 1% மேலாக சரிவில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள பார்தி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட்ஸ், கே.எஸ்.டபள்யூ ஸ்டீல், பவர் கிரிட் கார்ப், ஹிண்டால்கோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் பைனான்ஸ், ஓ.என்.ஜி.சி, பஜாஜ் பின்செர்வ், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் முடிவடைந்துள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பார்தி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட்ஸ், பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்செர்வ், ரிலையன்ஸ், என்.டி.பி.சி, டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் முடிவடைந்துள்ளன.


Click it and Unblock the Notifications