இன்று ஆசிய சந்தையும் உயர்வான வர்த்தகத்தைப் பெற்று இருக்கும் போது மும்பை பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் அதிகளவில் தங்களது முதலீட்டை வெளியேற்றிவிட்டனர்.
பொதுவாக மும்பை பங்குச்சந்தையில், வங்கிகள் மீதான முதலீடு அதிகமாகவே இருக்கும். இதில் உள்நாட்டு முதலீட்டாளர்களை விடவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடு செய்வார்கள், இதனாலேயே இந்திய பொருளாதாரத்திற்கு வங்கிகள் முதுகெலும்பு எனக் கூறப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி சந்தையில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
இந்திய வங்கித்துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி உள்நாட்டு முதலீட்டாளர்களை மட்டுமல்ல வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தொடர் சரிவு
இதன் எதிரொலியாகத் திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் இருந்தே சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு தொடர்ந்து சரிவை மட்டுமே சந்தித்து வருகிறது.
52 வார சரிவு
இன்றைய வர்த்தகத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் 52 வாரச் சரிவு அதாவது 113.10 ரூபாய் அளவு வரையில் சரிவடைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் இவ்வங்கியின் மீது வைத்திருந்த நம்பிக்கை இழந்துள்ளது.
சென்செக்ஸ் மற்றும் நிப்டி
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 236.10 புள்ளிகள் சரிந்து 33,774.66 புள்ளிகளை அடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 73.90 புள்ளிகள் சரிந்து 10,378.40 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
தனியார் வங்கிகள்
வர்த்தக முடிவில் பொதுத்துறை வங்கிகள் சரிவை சந்தித்துள்ள நிலையில், தனியார் வங்கிகளான ஆக்சிஸ் வங்கி, கோட்டாக் வங்கி, யெஸ் வங்கி ஆகியவை உயர்வைச் சந்தித்தது.


Click it and Unblock the Notifications