மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குசந்தை..!
வியாழக்கிழமை செப்டம்பர் காலாண்டுக்கான ஜிடிபி தரவுகள் வெளியாகும் நிலையில், முதலீட்டாளர்கள சற்று கவனமாக உள்ளனர். மேலும் நாளை நவம்பர் மாதத்திற்கான ஆர்டர்கள் முடிவடையும் காரணத்தால் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்று லாபத்தை பெறும் முடிவில் இறங்கியுள்ளனர்.
இதன் காரணமாக இன்றைய வர்த்தகம் முழுவதும் மந்தமாகவே இருந்தாலும், பெரிய அளவிலான சரிவையோ, உயர்வையோ காணவில்லை.

புதன்கிழணை வர்த்தக முடியும் சில மணிநேரத்திற்கு முன்பு சென்செக்ஸ் குறியீடு கணிசமான வர்த்தக சரிவை சந்தித்தது. இதனால் வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 15.83 புள்ளிகள் சரிந்து 33,602.76 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 8.95 புள்ளிகள் சரிந்து 10,361.30 புள்ளிகளை அடைந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications