மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை..!

மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை..!

இந்திய பொருளாதாரத்தின் முக்கிய வர்த்தகத் துறையாக விளங்கும் வங்கித்துறையில் இண்டஸ்இன்ட் வங்கி லாப இலக்குகளைத் தவறவிட்ட காரணத்தாலும், நாளை யெஸ் வங்கி தனது காலாண்டு முடிவுகளை வெளியிடும் காரணத்தினாலும் இன்று இந்திய வங்கி நிறுவனப் பங்குகள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.

இதன் படி காலை வர்த்தகம் துவக்கம் முதல் மாலை வரை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த மும்பை பங்குச்சந்தை முதலீட்டாளர்களை ஏமாற்றாமல் உயர்வுடன் முடிவடைந்தது.

அன்னிய முதலீட்டாளர்கள்

அன்னிய முதலீட்டாளர்கள்

புதன்கிழமை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டாளர்களின் குறைவான முதலீட்டின் காரணமாக இன்று சென்செக்ஸ் குறியீடு தொடர்ந்து மந்தமான வர்த்தகத்தையே பதிவு செய்தது.

இதன் படி வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 17.47 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 29,336.57 புள்ளிகளை அடைந்தது.

 

நிஃப்டி

நிஃப்டி

சென்செக்ஸ் குறியீட்டை போலவே மந்தமான வர்த்தகத்தையும் குறைந்த முதலீட்டையும் பெற்ற நிஃப்டி குறியீடு 1.65 புள்ளிகள் சரிவுடன் முடிவடைந்தது.

புதன்கிழமை வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 1.65 புள்ளிகள் சரிந்து 9,103.50 புள்ளிகளை அடைந்தது.

 

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்றைய வர்த்தகத்தில் எஸ்பிஐ வங்கி சுமார் 2.05 சதவீதம் வரையிலான சரிவை அடைந்தது.

இதனைத் தொடர்ந்து டாக்டர் ரெட்டி, ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஓஎன்ஜிசி, ஹீரோமோட்டோ கார்ப், இன்போசிஸ், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவை தழுவியது.

 

லாபம்

லாபம்

மேலும் புதன்கிழமை வர்த்தக முடிவில் பவர் கிரின்ட், அதானி போர்ட்ஸ், என்டிபிசி, கோல் இந்தியா, மாருதி, விப்ரோ, ஏசியன் பெயின்ட்ஸ், எச்டிஎப்சி, பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் லாபத்தைச் சந்தித்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+