வியாழக்கிழமை அமெரிக்கப் பங்குச்சந்தை வர்த்தகம் மந்தமாக இருந்த காரணத்தால் இன்று ஆசிய சந்தையும் குறைவான முதலீட்டையே பெற்றது. இதன் எதிரொலியாக இன்று மும்பை பங்குச்சந்தையில் காலை முதல் சரிவான வர்த்தகத்தை மட்டுமே பதிவு செய்துள்ளது.
ஆசிய சந்தையில் ஏற்பட்ட மாந்தமான வர்த்தகச் சூழ்நிலையின் எதிரொலியாக இன்றைய வர்த்தக முடிவில் 12 புள்ளிகள் சரிவை சந்தித்துச் சென்செக்ஸ்.

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 11.71 புள்ளிகள் சரிந்து, நிஃப்டி குறியீடு 1.25 புள்ளிகள் சரிந்து 10,564.05 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகத்துடன் இந்த வாரத்திற்கான வர்த்தகமும் முடிந்தது.
இன்றைய வர்த்தகத்தில் டிசிஎஸ் 6.76 சதவீதமும், இன்போசிஸ் 4.02 சதவீதமும் காலாண்டு முடிவுகளின் வாயிலாக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து கோல் இந்தியா, விப்ரோ, பார்தி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி ஆகியவை அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்தது.


Click it and Unblock the Notifications