இன்று ஜூன் மாத ஆர்டர்கள் முடிவடையும் காரணத்தால் வர்த்தக முடிவில் வெறும் 23 புள்ளிகள் உயர்வுடன் மும்பை பங்குச்சந்தை நிறைவடைந்தது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து வங்கித்துறை பங்குகள் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், இன்று வங்கித்துறை பங்குகள் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக ஆக்சிஸ் வங்கி இன்று சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது.
ஜூலை 1ஆம் தேதி மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை அமலாக்கம் செய்ய உள்ள நிலையில், இந்திய வர்த்தக சந்தை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என நம்பிக்கையுடன் இன்று அன்னிய சந்தைகளில் இருந்து அதிகளவிலான முதலீடு குவிந்தது.
கணிப்பு
ஜிஎஸ்டி வரி அமலாக்கத்தின் மூலம் சென்செக்ஸ் குறியீடு டிசம்பர் மாதத்திற்குள் 33,000 புள்ளிகளையும், அடுத்த வருடத்தின் மத்தியில் 34,500 புள்ளிகளையும் அடையும் என கணிப்புகள் வெளியாகியுள்ளது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 2017ஆம் ஆண்டின் முடிவில் 10,000 புள்ளிகளை அடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
அன்னிய முதலீடு
இதுவே இன்று அன்னிய முதலீட்டை அதிகளவில் ஈர்க்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
மேலும் இனி வரும் காலங்களில் இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டின் அளவு தொடர்ந்து அதிகரிக்கும் என்பது உறுதி.
மும்பை பங்குச்சந்தை
இன்று காலை வர்த்தக துவக்கத்தில் அதிகளவிலான அன்னிய முதலீட்டின் காரணமாக 165 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ், ஜூன் மாத ஆர்டர் முடிவின் காரணமாக மளமளவென சரிந்தது.
ஐரோப்பிய சந்தை
மேலும் ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் 100 புள்ளிகள் வரை உயர்ந்தாலும் சந்தை முடிவில் வெறும் 23.20 புள்ளிகள் மட்டுமே உயர்ந்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 23.20 புள்ளிகள் உயர்ந்து 30,857.52 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 12.85 புள்ளிகள் உயர்ந்து 9,504.10 புள்ளிகளையும் அடைந்து வியாழக்கிழமை வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications