ஆசிய சந்தையின் வலிமையான வர்த்தகம் மற்றும் கணிசமான பன்னாட்டு முதலீடுகள் மூலம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வர்த்தக உயர்வை சந்தித்து வந்த மும்பை பங்கச்சந்தை இன்று சரிவுடன் முடிவடைந்தது.
தீடீர் பங்கு விற்பனை
வியாழக்கிழமை வர்த்தக முடிவில், முதலீட்டாளர்கள் திடிரென முக்கிய நிறுவனங்களின் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்த காரணத்தால் இன்று வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை
இன்று வர்த்தக துவக்கத்தில் உயர்வுடன் துவங்கிய மும்பை பங்குச்சந்தை வர்த்தகம், 10.30 மணிமேல் தொர்ந்து சரிவிலேயே இருந்தாலும், ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் கணிசமான உயர்வை சந்தித்தது.
இந்நிலையில் முதலீட்டாளர்களின் திடீர் பங்கு விற்பனையில் காரணமாக இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் சரிவுடன் முடிவடைந்து முதலீட்டாளர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
மதியம் 3.30 மணிக்கு முடிந்த பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 79.68 புள்ளிகள் சரிந்து 31,592.03 புள்ளிகளை அடைந்தது. நிஃப்டி குறியீடு 26.20 புள்ளிகள் சரிந்து 9,888.70 புள்ளிகளை அடைந்து வியாழக்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
மும்பை பங்குச்சந்தையின் எஸ் அண்ட் பி குறியீட்டில் இன்று பவர் கிரிட், ஐசிஐசிஐ வங்கி, ஹீரோமோட்டோ கார்ப், பஜாஜ் ஆட்டோ, ஆக்சிஸ் வங்கி ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.


Click it and Unblock the Notifications