திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் கணிசமான உயர்வை சந்தித்த மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு, சர்வதேச பங்குச்சந்தைகள் பல காரணங்களால் பாதிக்கப்பட உள்ளதை கணக்கிட்டு மிட்கேப் மற்றும் வங்கித்துறையில் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்தனர்.
இந்த திடீர் விற்பனையில் காரணமாக காலை 11 மணி வரை கணிசமான உயர்வை பெற்று வந்த சென்செக்ஸ் மளமளவென சரிந்துள்ளது.
முக்கிய துறைகள்
இன்றைய வர்த்தகத்தில் மிட்கேப், வங்கி, ஐடி மற்றும் மெட்டல் துறையில் இருக்கும் நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு அதிகளவிலான வர்த்தக சரிவை அடைந்துள்ளது
சென்செக்ஸ்
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று உயரும் என நம்பப்பட்ட நிலையில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு முதலீட்டாளர்கள் லாப நோக்கத்திவ் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தனர். இதன் காரணமாக இன்று வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு சுமார் 265.83 புள்ளிகள் வரை சரிந்து 31,258.85 புள்ளிகள் வரை சரிந்தது.
நிஃப்டி குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடு 11.45 மணிக்கு மேல் மளமளவென சரிந்தது. இதனால் வர்த்தக முடிவில் 83.05 புள்ளிகள் சரிந்து 9,754.35 புள்ளிகளை அடைந்தது.
நஷ்டமடைந்த நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 5.37 சதவீதம் வரை சரிந்து முதலீட்டாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனை தொடர்ந்து சன் பார்மா, டாக்டர் ரெட்டி, அதானி போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் 2 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை சந்தித்தது.
லாபம் அடைந்த நிறுனவனங்கள்
மும்பை பங்குச்சந்தையில் எஸ் அண்ட் பி சென்செக்ஸ் குறியீட்டின் கீழ் இருக்கும் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஆக்சிஸ் வங்கி, டிசிஎஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, எச்டிஎப்சி, ஐடிசி, விப்ரோ ஆகிய நிறுவனங்கள் 0.05 சதவீதத்தில் இருந்து 0.70 சதவீதம் வரையிலான உயர்வை மட்டுமே அடைந்து.
டாப் 30 நிறுவனங்களில் உயர்வடைந்த நிறுவனங்களும் இதுவே.


Click it and Unblock the Notifications