அமெரிக்காவின் வேலைவாய்ப்புத் தரவுகள் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சிக்குச் சாதகமாக இருக்கும் காரணத்தாலும், சீனா - அமெரிக்கா மத்தியிலான வர்த்தகப் போர் பிரச்சனை குறைந்துள்ள காரணத்தாலும் இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் ஜப்பான் முதல் ஆஸ்திராலியா வரையில் லாபத்தில் துவங்கியது.
இதன் எதிரொலியாகத் தொடர் சரிவைச் சந்தித்து வந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு இன்று தூள்கிளப்பியுள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 610 புள்ளிகள் உயர்ந்து கடந்த ஒரு வருடத்தில் காணாத ஒரு நாள் உயர்வை அடைந்துள்ளது.
உலகச் சந்தை
இன்றைய சர்வதேச சந்தையில் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு தரவும் அதிகளவிலான ஆதிக்கத்தை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக ஆசிய சந்தை மற்றும் ஐரோப்பிய சந்தை அதிகளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை
ஆசிய சந்தையின் தாக்கத்தின் காரணமாக மும்பை பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் துவங்கும் முதலே 100 புள்ளிகள் அதிகமான வளர்ச்சியை அடைந்தது, இதன் தொடர் வளர்ச்சியில் ஐரோப்பிய சந்தை துவக்கத்தில் மும்பை பங்குகச்சந்தை 600 புள்ளிகள் வரையிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 610.80 புள்ளிகள் வரையில் உயர்ந்து 33,917.94 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 194.55 புள்ளிகள் வரையில் உயர்ந்து 10,421.40 புள்ளிகளை அடைந்துள்ளது.
டாப் 30 நிறுவனங்கள்
வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் கோல் இந்தியா மற்றும் எஸ்பிஐ ஆகிய வங்கிகள் சரிவை சந்தித்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியான லாபத்தைப் பார்தி ஏர்டெல், என்டிபிசி, ஐடிசி ஆகிய நிறுவனங்கள் 4 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications