அமெரிக்கா வட கொரியா நாடுகள் மத்தியில் இருந்த பிரச்சனை இரு நாட்டு அதிபர்கள் இன்று சிங்கப்பூர் சந்திப்பில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் மாத பணவீக்கம் எதிரொலிகளையும் தாண்டி இன்று ஆசிய சந்தையில் வர்த்தக எதிரொலிகளால் மும்பை பங்குச்சந்தை அதிகளவிலான முதலீட்டையும், வர்த்தகத்தையும் பெற்றுள்ளது.
சிங்கப்பூர் கூட்டம்
டொனால்டு டிரம்ப் மற்றும் கிம் ஆகியோர் மத்தியில் கடந்த சில மாதங்களாகவே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் இன்றைய கூட்டத்தில் இருவரும் சந்தித்து எதிர்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
ஆசிய சந்தை
இதன் எதிரொலியாக இன்று ஆசிய சந்தை வர்த்தகத்தில் ஆஸ்திரேலியா, சீனா, ஹாங்காங், ஜப்பான் ஆகிய சந்தைகள் உயர்வுடன் வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது.
மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு 209.05 புள்ளிகள் உயர்ந்து 35,692.52 புள்ளிகளை அடைந்திருந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 55.90 புள்ளிகள் உயர்வுடன் 10,842.85 புள்ளிகள் எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
லாபமடைந்த பங்குகள்
மும்பை பங்குச்சந்தையில் இருக்கும் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் டாக்டர் ரெட்டி 5.23 சதவீதமும், எஸ்பிஐ 3.36 சதவீதமும் வளர்ச்சி அடைந்திருந்தது. மேலும் இண்டஸ்இந்த் வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஹீரோமோட்டோ கார்ப், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்திருந்தது.
நஷ்டமடைந்த நிறுவனங்கள்
பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், கோல் இந்தியா, ஓஎன்ஜிசி, ஆகிய நிறுவனங்கள் 1 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications