அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர் பதற்றத்தில் இருந்து மீண்ட அன்னிய முதலீட்டாளர்கள் இன்று மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீட்டைச் செய்தனர். இதன் எதிரொலியாக 2 நாள் சரிவில் இருந்த மும்பை பங்குச்சந்தை இன்று உயர்ந்துள்ளது.
இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு அன்னிய முதலீட்டாளர்கள் மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் அதீத முதலீட்டின் காரணமாகக் காலை முதல் வர்த்தகம் உயர்வான நிலையில் இருந்தது.

மேலும் புதன்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 260.59 புள்ளிகள் உயர்ந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 61.60 புள்ளிகள் உயர்ந்து 10,772.05 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ், இண்டஸ்இந்த், வேதாந்தா ஆகியவை 2 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் உயர்ந்தது. இதைத் தொடர்ந்து யெஸ் வங்கி, கோட்டாக் மஹிந்திரா வங்கி, டாடா ஸ்டீல், ஹெச்டிஎப்சி வங்கி ஆகியவை அதிகமான அளவிற்கு உயர்ந்தது.
அதேபோல் ஒஎன்ஜிசி, கோல் இந்தியா, ஐடிசி, விப்ரோ, எல் அண்ட் டி ஆகியவை சரிவை சந்தித்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications