புத்தாண்டு துவங்கிய முதல் மும்பை பங்கு சந்தையில் மந்தமான வர்த்தகத்தை மட்டுமே சந்தித்து வருகிறது. இதற்குப் பணமதிப்பிழப்பு ஒரு முக்கியக் காரணமாக விளங்கினாலும் அன்னிய சந்தையில் முதலீடு அதிகளவில் குறைந்து காணப்படுகிறது. இதற்குப் புத்தாண்டையொட்டி வரும் தொடர் விடுமுறை காரணமாக முதலீடு குறைந்துள்ளது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தின் துவக்கம் முதலே மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்து வந்த நிலையில் வர்த்தக முடிவில் வெறும் 47 புள்ளிகள் மட்டுமே உயர்வுடன் முடிந்தது.

செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 100 புள்ளிகள் அளவிற்கு உயர்ந்தாலும், வர்த்தக முடிவில் வெறும் 47.79 புள்ளிகள் உயர்வுடன் மட்டுமே முடிந்துள்ளது. இதனால் சென்செக்ஸ் குறியீடு 26,643.24 புள்ளிகளுடன் இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடு 12.75 புள்ளிகள் உயர்ந்து 8,192.25 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications