39,000 புள்ளிகளைத் தொடாத சென்செக்ஸ்..! 11,600-ஐக் கடக்காத நிஃப்டி..!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரியை 25 சதவிகிதமாக குறைத்ததால் சந்தை தன் இறக்கப் போக்கை தூரப் போட்டு ஏற்றப் போக்கை கையில் எடுத்தது. கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் இந்த வாரத்தில் முதல் வர்த்தக நாள் ஆகிய இரண்டு நாளில் மட்டும் சுமாராக சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் ஏற்றம் கண்டது.

அடுத்தடுத்த வர்த்தக நாட்களில் சின்ன சின்ன ஏற்றம் இறக்கங்கள் என முதலீட்டாளர்களையும், வர்த்தகர்களையும் சுத்தலில் விட்டது சந்தை. ஆனால் நேற்று ஒரே நாளில் சென்செக்ஸ் சுமாராக 500 புள்ளிகள் இறக்கம் கண்டு அதிர வைத்தது. ஆனால் நேற்றைய 500 புள்ளிகள் இறக்கத்தை சென்செக்ஸ் இன்று ஒரே நாளில் ஏற்றம் கண்டு சரி செய்து இருக்கிறது.

39,000 புள்ளிகளைத் தொடாத சென்செக்ஸ்..! 11,600-ஐக் கடக்காத நிஃப்டி..!

இன்று காலை முதலே சென்செக்ஸ் ஒரு நல்ல ஏற்றத்துடனேயே வர்த்தகமாகத் தொடங்கியது. இன்று வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் தன் நேற்றைய குளோசிங் புள்ளியை விட 396 புள்ளிகள் அதிகரித்து இருக்கிறது. ஆனாலும் சென்செக்ஸ் தன் வலுவான ரெசிஸ்என்ஸ் புள்ளியான 39,000-த்துக்கு மேல் நிறைவு அடையவில்லை என வர்த்தகர்கள் வருத்தப்படுகிறார்கள். ஆக 39,000 கடந்த சில மாதங்களாக சென்செக்ஸுக்கு ஒரு மாய எண்ணாகவே தான் இருக்கிறது என்பதை இப்போதும் நிரூபித்து இருக்கிறது.

எனவே நாளை சென்செக்ஸ் ஏற்றம் காணத் தொடங்கினால் 39,000 முதல் ரெசிஸ்என்ஸாகவே இருக்கும். அதை உடைத்துக் கொண்டு மேலே வந்தால் மிக வலுவான 39,500 ரெசிஸ்டென்ஸ் சென்செக்ஸின் வேகத்தை பெரிய அளவில் கட்டுப்படுத்தும். ஒருவேளை சந்தை இறக்கம் காணத் தொடங்கினால் 38,500 முதல் மற்றும் வலுவான சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம். ஒருவேளை அதற்குப் பின்னும் இறக்கம் கண்டால் 38,000 தான் அடுத்த வலுவான சப்போர்ட் புள்ளிகளாக கண்ணில் படுகிறது.

நேற்று மாலை சென்செக்ஸ் 38,593 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 38,700 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 38,989 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 396 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது. அதே போல் நிஃப்டி 50 இண்டெக்ஸ் நேற்று மாலை 11,440 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 11,469 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,573 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 133 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 23 பங்குகள் ஏற்றத்திலும், 07 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 41 பங்குகள் ஏற்றத்திலும், 09 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,679 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,277 பங்குகள் ஏற்றத்திலும், 1,239 பங்குகள் இறக்கத்திலும், 163 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,645 பங்குகளில் 55 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 127 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் பெரும்பாலான துறை சார் இண்டெக்ஸ்கள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஆட்டோ, மீடியா, மெட்டல், ரியாலிட்டி போன்ற துறை இண்டெக்ஸ்கள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஐடி துறை இண்டெக்ஸ் மட்டுமே மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாயின. எஸ்பிஐ, ஹெச் டி எஃப் சி, ஹெச் டி எஃப் சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோசிஸ் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின. வேதாந்தா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, கோல் இந்தியா, ஜி எண்டர்டெயின்மெண்ட், ஓ என் ஜி சி போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.

யெஸ் பேங்க், இன்ஃபோசிஸ், ஹிச் யூ எல், ஹெச் சி எல் டெக், விப்ரோ போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 70.94-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 62.35 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+