மும்பை பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் துவங்கியது முதல் சரிவுடன் இருந்தாலும், ஐரோப்பிய பங்குச்சந்தை வர்த்தகம் துவங்கிய பின்பு பெரிய அளவிலான சரிவை சந்தித்தது. இதன் மூலம் சென்செக்ஸ் குறியீடு யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 1000 புள்ளிகள் வரையில் சரிந்தது. இந்த சரிவு ரீடைல் முதலீட்டாளர்களை கடுமையாக பாதித்தது.
சென்செக்ஸ் குறியீடு செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 66,459.31 புள்ளிகளை எட்டிய நிலையில், இன்றைய வர்த்தகத்தில் 65,431.68 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது. தற்போது 734.28 புள்ளிகள் சரிந்து 65,725.03 புள்ளிகளில் உள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் நெஸ்லே, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ், அல்ட்ராடெக் பங்குகள் மட்டுமே உயர்வுடன் உள்ளது. அதில் நெஸ்லே மட்டுமே 1 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்வை பதிவு செய்துள்ளது. மற்ற அனைத்து நிறுவனங்களும் பெரும் சரிவை சந்தித்துள்ளது.
இதில் முக்கியமாக டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் ஆகியவை 3 சதவீதத்திற்கும் குறைவான சரிவை சந்தித்துள்ளது. ஐடி சேவை நிறுவனங்களான டெக் மஹிந்திரா, டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ ஆகியவை கணிசமான சரிவை மட்டுமே பதிவு செய்துள்ளது.
இன்றைய சரிவுக்கு மிக முக்கியமான காரணம் உலகின் முன்னணி கிரெடிட் ரேட்டிங் நிறுவனமான பின்ச் ரேட்டிங்க்ஸ் நிறுவனம் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் கிரெடிட் ரேட்டிங்-ஐ AAA அளவில் இருந்து AA+ ரேட்டிங் உடன் ஸ்டேபிள் அவுட்லுக் கொடுத்துள்ளது.
இந்த கிரெடிட் ரேட்டிங் குறைப்பு முதலீட்டு சந்தையில் பெரும் தாக்கத்தை இந்தியாவில் மட்டும் அல்லாமல் சர்வதேச அளவில் ஏற்படுத்தியுள்ளது. 2011 ஆம் ஆண்டில் S&P அமெரிக்காவின் கிரெடிட் ரேட்டிங்-ஐ AAA அளவில் இருந்து AA+ ரேட்டிங் ஆக குறைத்து negative outlook கொடுத்த போது ஏற்பட்ட அதே தாக்கம் மீண்டும ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவின் கிரெடிட் ரேட்டிங்-ஐ நிறுவனங்கள் சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளதால் பின்ச் ரேட்டிங்க்ஸ் நிறுவனம் எவ்விதமான மாற்றமும் செய்யாமல் தொடர்ந்து பழைய ரேட்டிங்-ஐ கொடுத்துள்ளது.
பின்ச் ரேட்டிங்க்ஸ் நிறுவனத்தின் கிரெடிட் ரேட்டிங் அறிவிப்பு மூலம் இந்திய சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் அதிகளவில் வெளியேறியது.


Click it and Unblock the Notifications