இந்திய பங்குச்சந்தையில் இன்று கடுமையான சரிவு பதிவு செய்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாட்டின் முன்னணி நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL) மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதன் காரணமாகப் பங்குச்சந்தை குறியீடுகள் தொடர்ந்து சரிவிலேயே இருந்தது.
S&P BSE Sensex இன்று காலை உயர்வுடன் தொடங்கினாலும், 73,467.73 புள்ளிகள் சரிந்தது. வர்த்தக முடிவில் 732 புள்ளிகள் சரிந்து 73,878.15 புள்ளிகளை எட்டியது. அதேபோல், நிஃப்டி 50 குறியீடு 172.35 புள்ளிகள் சரிந்து 22,475 புள்ளிகளை தொட்டு இன்றைய வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.

இதனால் மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தையில் அனைத்து துறை வாரியான குறியீடுகளும் இன்று சரிவில் இருந்தது. இதன் எதிரொலியாகப் பங்குச்சந்தை மூலதன மதிப்பீடு 2.53 லட்சம் கோடி ரூபாய் வரை குறைந்து முதலீட்டாளர்கள் பெரும் இழப்பை எதிர்கொண்டனர்.
மேலும் இந்திய பங்குச்சந்தையின் ஆபத்து அளவுகோலான இந்தியா விக்ஸ் (India VIX) குறியீடும் தொடர்ந்து ஏழாவது நாளாக உயர்ந்து, 11% அதிகரித்துக் கிட்டத்தட்ட 15 ஐ எட்டியுள்ளது முதலீட்டாளர்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
இன்று காலை உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை, ரிலையன்ஸ், எல்&டி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் பார்தி ஏர்டெல் போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகளில் ஏற்பட்ட அதிகப்படியான விற்பனை காரணமாகச் சரிய துவங்கியது.
முன்னணி நிறுவனப் பங்குகளின் வீழ்ச்சியே சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி-யின் மோசமான சரிவுக்கு முக்கிய காரணமாகும்.
பங்குச்சந்தை உணர்வுகளைப் பாதிக்கும் பல்வேறு காரணிகள் காரணமாக, பங்குச்சந்தை நிலையற்ற தன்மையை அளவிடும் இந்தியா விக்ஸ் குறியீடு 12% க்கும் மேல் உயர்ந்து 15.12 ஐ எட்டியுள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ் ஆகியவை 1 சதவீதத்திற்கும் குறைவான சரிவை பதிவு செய்தது. இதில் அதிகப்படியான 0.75 சதவீதமும், குறைவான அளழாக 0.11 சதவீத உயர்வை பதிவு செய்துள்ளது.
பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ், நெஸ்லே, மாருதி, எல் அண்ட் டி ஆகியவை 2 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்து இன்றைய மோசமான சரிவுக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications