பட்ஜெட் பதற்றம்.. தொடர் சரிவில் சென்செக்ஸ்.. நிஃப்டியும் 13,900 கீழ் சரிவு.. !

இந்திய சந்தைகள் போதும் போதும் எனும் அளவுக்கு கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே சரிந்து வருகின்றது. சொல்லப்போனால் நேற்று மட்டும் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியினை கண்டது. இது பட்ஜெட்டுக்கு முந்தைய சரிவு என்று கருதப்பட்டாலும், இன்று
எஃப்&ஓ எக்ஸ்பெய்ரி என்பதாலும் இந்த சரிவு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு அமெரிக்க சந்தைகளின் சரிவின் எதிரொலியால், ஆசிய சந்தைகளும் பலத்த சரிவினைக் கண்டு வருகின்றன. இதனால் இந்திய சந்தையும் தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வருகின்றது.

அதோடு வரவிருக்கும் பட்ஜெட்டில் எந்த மாதிரியான அறிவிப்புகள் வரப்போகிறதோ? எந்த துறைக்கு சாதகமாக இருக்கும்? இது பங்கு சந்தைக்கு எந்தளவுக்கு கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே அன்னிய முதலீடுகளும் வெளியேறி வருகின்றன. இதன் காரணமாகவும் சந்தை தொடர்ச்சியான சரிவினைக் கண்டு வருகின்றது.

தொடக்கமே சரிவு தான்

தொடக்கமே சரிவு தான்

குறிப்பாக இன்று ப்ரீ ஒபனிங் சந்தையிலேயே சந்தை சரிவினைக் கண்ட நிலையில், தொடக்கத்திலும் பலத்த சரிவினைக் கண்டுள்ளது. குறிப்பாக சென்செக்ஸ் 377.99 புள்ளிகள் குறைந்து, 47,031.94 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 113.10 புள்ளிகள் குறைந்து, 13,854 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 301 பங்குகள் ஏற்றத்திலும், 883 பங்குகள் சரிவிலும் 54 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

முக்கிய சப்போர்ட்

முக்கிய சப்போர்ட்

முன்பு நிஃப்டியின் மீடியம் டெர்ம் சப்போர்ட் விகிதம் 14,250 என்றும், அதனை உடைத்து சென்றால் அடுத்த இலக்காக 13,950 புள்ளிகள் வரை செல்லலாம் என்றும் கூறியிருந்தோம். தற்போது அந்த லெவலையும் உடைத்துக் காட்டியுள்ளது. இந்த லெவலில் சந்தை நிலைக்காவிட்டால், அடுத்தது 13,600 என்ற புள்ளிகளை சந்திக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆக சந்தை இன்னும் சரிவினைக் காணும் விதமாக இருப்பதால், இந்த லெவலையும் தொட்டாலும் தொடலாம்.

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

இன்றும் நிஃப்டி, சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அனைத்து இன்டெக்ஸ்களும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் ஆக்ஸிஸ் வங்கி, பிபிசிஎல், ஈச்சர் மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹெச்யுஎல், யுபிஎல், கோடக் மகேந்திரா, பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

 

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

இதே சென்செக்ஸ் குறியீட்டில் ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ் , ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி, இந்தஸிந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹெச்யுஎல் நிறுவனம், பவர் கிரிட் கார்ப், டெக் மகேந்திரா, கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

ரூபாய் மதிப்பு எவ்வளவு?

ரூபாய் மதிப்பு எவ்வளவு?

இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது, 21 பைசா குறைவாக தொடங்கி, 73.13 ரூபாயாக சரிவில் காணப்படுகிறது. இது உள்நாட்டு சந்தைகள் பெரும் சரிவினை கண்டு வரும் நிலையில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 402.71 புள்ளிகள் குறைந்து, 47,007.22 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 117.70 புள்ளிகள் குறைந்து, 13,849 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+