350 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்.. ஏன் என்ன ஆச்சு..!

முந்தைய அமர்வில் சென்செக்ஸ் முதன் முறையாக 46,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்த, அடுத்த நாளே இப்படி 350 புள்ளிகளுக்கு மமேல் சரிந்துள்ளதே என்ன காரணம்? வாருங்கள் பார்க்கலாம்.

கடந்த சில வர்த்தக தினங்களாக புதிய உச்சத்தினை தொட்டு வரும் இந்திய பங்கு சந்தைகள் இன்று சரிவில் தான் தொடங்கியுள்ளது. இது புராபிட் புக்கிங் காரணமாக இருக்கலாம் என்ற நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

இன்று சந்தை ப்ரீ ஒபனிங்லேயே சற்று சரிவில் தான் காணப்பட்டது. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 69.23 புள்ளிகள் குறைந்து, 46,034.27 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 11.30 புள்ளிகள் அதிகரித்து 13,540.40 ஆகவும் இருந்தது.

தொடக்கத்திலேயே சரிவு தான்

தொடக்கத்திலேயே சரிவு தான்

இதனையடுத்து தொடக்கத்திலும் சரிவிலேயே தொடங்கியது. குறிப்பாக சென்செக்ஸ் 179.07 புள்ளிகள் குறைந்து 45,924.43 ஆகவும், இதே நிஃப்டி 58 புள்ளிகள் குறைந்து, 13,471.10 ஆகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 660 பங்குகள் ஏற்றத்திலும், 677 பங்குகள் சரிவிலும், 86 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

சரிவுக்கு என்ன காரணம்

சரிவுக்கு என்ன காரணம்

சந்தைக்கு சாதகமாக தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வரத்து, கொரோனா தடுப்பூசி குறித்த சாதகமான அறிக்கைகள், சர்வதேச சந்தையின் எதிரொலி உள்ளிட்ட பல காரணங்களினால் இன்று இந்திய சந்தைகள் கடந்த சில தினங்களாக ஏற்றத்தில் இருந்து வந்தது. அப்படி இருக்கையில் இன்று சரிவில் உள்ளதே என்ன காரணம்? இது புராபிட் புக்கிங் காரமாக இந்த சரிவு இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

இதற்கிடையில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகளில் அனைத்தும் சிவப்பு நிறத்திலேயே உள்ளன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள நெஸ்டில், மாருதி சுசூகி, டைட்டன் நிறுவனம், பிரிட்டானியா, ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே யுபிஎல், டாடா மோட்டார்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஐஓசி, ஸ்ரீ சிமெண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

இதே சென்செக்ஸ் குறியீட்டில் நெஸ்டில், மாருதி சுசூகி, டைட்டன் நிறுவனம், ஹெச்சிஎல் டெக், ஹெச்யுஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா ஸ்டீல், இந்தஸ்இந்த் வங்கி, சன் பார்மா, என்டிபிசி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 303.53 புள்ளிகள் குறைந்து, 45,799.97 ஆகவும், இதே நிஃப்டி 103.10 புள்ளிகள் குறைந்து, 13,426 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.

இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது நேற்று 73.56 ரூபாயாக முடிவடைந்தது. இந்த நிலையில் இன்று தொடக்கத்தில் 73.69 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது ஈக்விட்டி சந்தையில் செல்லிங் பிரசர் அதிகம் இருப்பதால் சற்று வீழ்ச்சி கண்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+