400 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. கொரோனா அச்சம், முதலீட்டாளர்கள் திடீர் முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புதன் கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 635 புள்ளிகள் சரிந்து நிலையில் முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட 5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டு இழப்பை எதிர்கொண்டனர்.

இந்த நிலையில் வியாழக்கிழமை வர்த்தகத்தில் இந்தியப் பங்குகள் உயர்வுடன் துவங்கிய நிலையில் முதலீட்டாளர்கள் பெரும் நம்பிக்கை உடன் இருந்த நிலையில், கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் கொரோனா தொற்று குறித்து மோடி இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார்.

சீனாவில் மக்களைப் பந்தாடி வரும் புதிய வகைக் கொரோனா தொற்று இந்திய முதலீட்டாளர்களைச் சற்றுப் பயமுறுத்தியது என்று சொன்னால் மிகையில்லை.

'இலவசம்' தான் சக்சஸ் மந்திரம்.. FIFA உலகக் கோப்பை மூலம் முகேஷ் அம்பானி -க்கு அடித்த ஜாக்பாட்..!'இலவசம்' தான் சக்சஸ் மந்திரம்.. FIFA உலகக் கோப்பை மூலம் முகேஷ் அம்பானி -க்கு அடித்த ஜாக்பாட்..!

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தையின் 2வது நாளாகச் சரிந்து வருகிறது, இந்தியாவில் கொரோனா அச்சம் அதிகரித்து வரும் நிலையில் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை வெளியேற்ற துவங்கியுள்ளனர். இன்று ஆசிய சந்தைகள் அனைத்தும் உயர்வுடன் இருக்கும் நிலையில் இந்தியச் சந்தை சரிவுடன் உள்ளது.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு உயர்வுடன் துவங்கினாலும் சில மணிநேரத்தில் சரிய துவங்கியுள்ளது. இதன் எதிரொலியாகச் சென்செக்ஸ் குறியீடு மதியம் 1 மணியளவில் 415 புள்ளிகள் வரையில் சரிந்து 60,637.24 புள்ளிகளை எட்டியுள்ளது. டிசம்பர் 1 ஆம் தேதி சென்செக்ஸ் 63583 புள்ளிகளை எட்டி வரலாற்று உச்சத்தைத் தொட்டது.

டாப் 30 நிறுவனங்கள்

டாப் 30 நிறுவனங்கள்


சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் பஜாஜ் பின்சர்வ் 3.12 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதைத் தொடர்ந்து எல் அண்ட் டி, இண்டஸ்இந்த், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் 2 சதவீதத்திற்கு அதிகமாகச் சரிந்துள்ளது. மேலும் சன் பார்மா, பார்தி ஏப்டெல், இன்போசிஸ் ஆகியவை உயர்வுடன் உள்ளது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு 104.35 புள்ளிகள் சரிந்து 18,094.75 புள்ளிகளை எட்டியுள்ளது. நிஃப்டி-யின் அனைத்துத் துறை சார்ந்த குறியீடுகளும், மிட்கேப், ஸ்மால்கேப், லார்ஜ்கேப் பங்குகளும் சரிந்துள்ளது.

அமெரிக்கப் பொருளாதாரத் தரவு

அமெரிக்கப் பொருளாதாரத் தரவு

அமெரிக்கப் பொருளாதாரத் தரவு முதலீட்டு சந்தைக்குச் சதகமாக அமைந்ததைத் தொடர்ந்து உலகளாவிய பங்குகளும் சந்தைகளும் லாபங்களைப் பதிவு செய்து வரும் நிலையில் மும்பை பங்குச்சந்தை கொரோனா தொற்று அச்சம் காரணம் உயர்வில் துவங்கிய சென்செக்ஸ், நிஃப்டி சரிந்துள்ளது.

ஐடி மற்றும் பார்மா

ஐடி மற்றும் பார்மா

புதன்கிழமை வர்த்தகத்தைப் போலவே, இன்றும் ஐடி மற்றும் பார்மா பங்குகள் மட்டுமே உயர்வுடன் உள்ளது, மற்ற அனைத்து துறைகளும் சரிவிலும், சரிவின் விளிம்பிலும் உள்ளது. பிரதமர் மோடி-யின் திடீர் ஆலோசனை கூட்டத்தின் முடிவுகள் சந்தையில் பெரும் தாக்கத்தை எற்படுத்த உள்ளது.

இன்னும் முடிவடையவில்லை

இன்னும் முடிவடையவில்லை

தகவல் தொழில்நுட்பம் மற்றும் பார்மா தொடர்ந்து இரண்டாவது நாளாக வளர்ச்சி பாதையில் உள்ளது, புதன் கிழமை மத்திய சுகாதார அமைச்சர் கொரோனா தொற்றுநோய் "இன்னும் முடிவடையவில்லை" என்று சமீபத்திய தொற்று எண்ணிக்கை உயர்வை தொடர்ந்து கூறியது முதலீட்டாளர்களைச் சோகமடையச் செய்துள்ளது.

லாக்டவுன்..?

லாக்டவுன்..?

கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் லாக்டவுன் அறிவித்தாலோ அல்லது மீண்டும் ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் கொடுத்தாலோ பாதிப்பு அடையாத துறை ஐடி மற்றும் பார்மா துறை மட்டுமே. இதன் வெளிப்பாடே மும்பை பங்குச்சந்தையில் கடந்த 2 நாட்களாகப் பார்மா மற்றும் ஐடி சேவை துறை பங்குகள் மட்டும் உயர்ந்து வருகிறது.

அக்சென்சர் ஊழியர்களின் திடீர் முடிவு.. இந்திய ஐடி ஊழியர்களே உஷார்..! அக்சென்சர் ஊழியர்களின் திடீர் முடிவு.. இந்திய ஐடி ஊழியர்களே உஷார்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

sensex fall 400 points; BF.7 variant of COVID-19 cases impacts stock market

sensex fall 400 points; BF.7 variant of COVID-19 cases impacts stock market
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X